'பதற்றத்தோடு நின்ற பயணி'... 'சந்தேகத்தில் சூட்கேஸை திறந்த அதிகாரிகள்'... கம்பிக்குள் காத்திருந்த வேற லெவல் ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் பல வழிகளில் கிடுக்கு பிடி போட்டாலும், கடத்தல்காரர்களும் பல புதிய வழிகளைக் கண்டறிந்து கடத்தலை மேற்கொண்டு வருகிறார்கள்.

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஜ்பே சர்வதேச விமானநிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து விமான மூலம் தங்கம், வெளிநாட்டுப் பணம், விலையுயர்ந்த பொருட்கள் கடத்தி கொண்டு வருவது அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக விமான நிலையத்தில் சுங்க வரித்துறை அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை துபாயிலிருந்து மங்களூருவுக்கு ஒரு விமானம் வந்திறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்க வரித்துறையினர் சோதனை நடத்திக் கொண்டு இருந்தனர்.

அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில், சுங்க வரித்துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர் சற்று பதற்றத்துடன் காணப்பட்டார். இதையடுத்து அந்த பயணியையும், அவரது உடைமையும் சுங்க வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் எந்த கடத்தல் பொருளும் சிக்கவில்லை. அதன்பிறகு அந்த பயணி வைத்திருந்த இழுத்துச் செல்லும் சூட்கேஸை திறந்து சோதனை செய்தனர்.

ஆனால் அதற்குள்ளும் ஒன்றும் இல்லை. ஆனாலும் அதிகாரிகளுக்குச் சந்தேகம் நீடித்த நிலையில், மீண்டும் தீவிரமாகச் சோதனை செய்தபோது கம்பி வடிவில் தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் உத்தர கன்னடா மாவட்டம் முருடேஸ்வர் பகுதியைச் சேர்ந்த முகமது அவான் என்பது தெரியவந்தது.

மேலும் அவரிடம் இருந்து ரூ.16.52 லட்சம் மதிப்பிலான 350 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  இதையடுத்து அவரை, சுங்கத்துறையினர் பஜ்பே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அவானை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்