மலக்குடலில் வச்சு எடுத்திட்டு போனா தான் சிக்க மாட்டோம்.. கடத்தல் காரர்கள் போட்ட பிளான்.. ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமானத்தில் மலக்குடல் மூலம் தங்கம் கடத்த முயன்ற நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

Advertising
>
Advertising

நாளுக்கு நாள் அரபு நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகமாகி விட்டது. குறிப்பாக சென்னை, பெங்களூரு, கொச்சின் உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் தங்க கடத்தலில் ஈடுபட்டு மாட்டிக் கொள்கின்றனர். முக்கியமாக ஒவ்வொரு கடத்தலிலும் திட்டம் போடுவது தான் வியப்பாக இருக்கும். பல நாள் திட்டம் போட்டு வித்தியாசமான முறைகளில் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். ஜேம்ஸ்பாண்டு முதல் தமிழ் திரைப்படங்களில் கூட இந்த மாதிரியான காட்சிகள் இன்னும் இடம்பெறவில்லை. அந்த அளவிற்கு ரூம் போட்டு யோசித்து கடத்தலில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற சினிமாக்களை உருவாக்கும் இயக்குனர்களும் நிறைய கதைகள் இதில் உள்ளது.

சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட பாதுகாப்பு பணி:

இந்த நிலையில், கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து ஃப்ளைடுபாய் விமானம் வந்தடைந்தது. எப்போதும் போல சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட பாதுகாப்பு பணியில் சுமார் ரூ.41.6 லட்சம் மதிப்புடைய தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருவர்:

இதுக்குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருவர் அங்குமிங்கும் நடந்துள்ளனர். இதனால் பணியில் இருந்த அதிகாரிகள், அவர்களை மடக்கிப் பிடித்து அவர்களின் துபாய் பயணம் குறித்து கேட்டுள்ளனர். அப்போது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் இருவரையும் அதிகாரிகள் விசாரணை வலைக்கு கீழ் கொண்டுவந்துள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தங்கம் கடத்தி வந்ததை குற்றவாளிகள் ஒப்புக்கொண்டனர்.

மலகுடல் வழியே கடத்தல்:

சுமார் ரூ.41.6 லட்சம் மதிப்புள்ள 866 கிராம் தங்கப் பசையை தங்களின் மலகுடல் வழியே கடத்தியுள்ளனர். அடுத்தப்படியாக அதிகாரிகள் சுங்க வரி ஏய்ப்பு செய்ததாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விமான நிலையத்தில் சில மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

GOLD, RECTUM, BANGALORE, FLIGHT, மலக்குடல், தங்கம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்