‘நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்’!.. ரூ. 5 லட்சத்துக்கு விற்பனை ஆன ‘ஒரு’ ஆடு.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடு ஒன்று 5 லட்ச ரூபாய் விற்பனையான சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. அந்த நாளில்  ஏழை, எளிய மக்களுக்கு இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி தானம் செய்வது வழக்கம். அதனால் பல்வேறு சந்தைகளில் ஆடு, மாடு விற்பனைகள் அமோகமாக நடைபெற்றன. அந்த வகையில் ஆடு ஒன்று 5 லட்ச ரூபாய்க்கு விற்பனையான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மொயின் கான் (Moin Khan). இவர் 10 மாதங்களாக கருப்பு ஆடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த ஆட்டிற்கு தினசரி உணவாக பாதம், முந்திரி, கருப்பு திராட்சை உள்ளிட்ட பொருட்களை கொடுத்து வளர்த்து வந்துள்ளார். இதனால் அந்த ஆடு நன்கு புஷ்டியாக வளர்ந்துள்ளது.

இதனை அடுத்து பக்ரீத் பண்டிகையையொட்டி இந்த ஆட்டை விற்பனை செய்துள்ளார். 175 கிலோ எடை, 4 அடி உயரம் கொண்ட இந்த ஆண்டு 5.5 லட்ச ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. இதேபோல் 150 கிலோ எடையுடைய மற்றொரு ஆடும் தன்னிடம் உள்ளதாக மொயின் கான் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த இரு ஆடுகளையும் அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்துச் சென்றுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்