கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்.. 12,000 அடி உயரத்தில் நடந்த பரபரப்பு.. கண்ணீர்விட்ட விமான பணிப்பெண்.. கடைசியில் நெகிழ்ச்சி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகோவாவில் இருந்து ஹைதராபாத் சென்ற விமானத்தில் திடீரென கரும்புகை எழுந்ததால் பயணிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளான சம்பவத்தில் DGCA நடவடிக்கையை துவங்கியுள்ளது.
கடந்த 12 ஆம் தேதி இரவு கோவாவில் இருந்து ஹைதராபாத் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் Q400 ரக விமானம். இரவு 11 மணிக்கு கிளம்பிய இந்த விமானத்தில் விமான பணியாளர்களுடன் சேர்த்து மொத்தம் 86 பேர் பயணித்திருக்கின்றனர். அப்போது, விமானத்தின் உள்ளே திடீரென கரும்புகை எழும்பியிருக்கிறது. இதனால் பயணிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்தனர். விமானத்தின் நடைபாதை முழுவதும் கரும்புகை சூழ, பயணிகள் என்ன செய்தவென்றே தெரியாமல் பீதியுடன் தங்களது இருக்கையில் அமர்ந்திருந்திருக்கின்றனர்.
இதனையடுத்து கரும்புகையுடன் அடுத்த 25 நிமிடங்கள் பயணித்த விமானம் பத்திரமாக ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருக்கிறது. அவசர வழி மூலமாக பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பயணி ஒருவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் விமானம் முழுவதும் புகையால் நிரம்பியிருப்பது புலனாகிறது. மேலும் அவர் எழுதிய பதிவில், கோவாவில் இருந்து ஹைதராபாத் சென்ற விமானத்தில் கரும்புகை ஏற்பட்டதாகவும் பின்னர் விமானம் பத்திரமாக தரையிறங்கியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், விமானத்தில் கரும்புகை கிளம்பிய உடனே அச்சமடைந்த பயணிகள் கடவுளை வேண்டிக்கொண்டே பயணித்திருக்கிறார்கள். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து, இதுகுறித்த விசாரணையில் இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இறங்கியது. அதன்படி ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை ஆயில் மாதிரி பரிசோதனை செய்யப்பட வேண்டும் என அந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது DGCA. ஆயில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கனடாவில் உள்ள பிராட் & விட்னி அமைப்புக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 400 பேருடன் பயணித்த விமானம்.. நைட்ல அதிகாரிகளுக்கு வந்த ஒரு ஈமெயில்.. கொஞ்ச நேரத்துல மொத்த ஏர்போர்ட்டையும் பிளாக் பண்ணிட்டாங்க..!
- பாம்பன் பாலத்தில் திக் திக்.. நேருக்குநேர் மோதிக்கொண்ட பேருந்துகள்.. நூலிழையில் போராடிய பயணிகள்.. முழுவிபரம்..!
- நடுவானில் பறந்த விமானம்.. திடீர்ன்னு உள்ள பாய்ஞ்ச துப்பாக்கி குண்டு.. "ஆனா சுட்டது உள்ள இருந்தவங்க இல்ல".. பீதி கிளப்பிய பின்னணி!!
- நடுவானில் விமானி வெளியிட்ட தகவல்.. உடனே கண்கலங்கிய பெண்.. கைதட்டி உற்சாகப்படுத்திய பயணிகள்.. நெகிழ வைக்கும் வீடியோ..!
- "கரெக்ட்டான Flight தான்.. ஆனா தப்பான நாட்டுல தரையிறங்கிடுச்சு".. பயணிகளுக்கு வந்த சந்தேகம்.. அதிகாரிகள் சொல்லிய பகீர் பதில்..!
- விமானத்தையே வீடா மாத்திட்டாங்க.. அதுவும் நடு காட்டுக்குள்ள.. வசதிகள் எல்லாம் மிரட்டலா இருக்கே..!
- கிளம்புன இடத்துக்கே திரும்புன விமானம்.. தரையிறங்குன அப்பறம் தான் விபரமே தெரியவந்திருக்கு..!
- விமானத்துல அழுதுகிட்டே இருந்த குழந்தை.. டக்குன்னு விமான பணியாளர் செய்த உதவியை பார்த்து நெகிழ்ந்துபோன பயணிகள்.. வீடியோ..!
- "Bus-அ நிறுத்துங்க".. திடீர்னு கத்திய பயணி.. சீட்டுக்கு கீழ இருந்ததை பார்த்துட்டு நடுங்கிப்போன கண்டக்டர்.. பரபரப்பான பொதுமக்கள்..!
- விமானத்துல ஜாலியா ஜன்னல் சீட்ல உக்காந்த இளைஞர்.. டேக் ஆஃப் ஆன கொஞ்ச நேரத்துல ஜன்னல் கண்ணாடியை பார்த்ததும் தூக்கிவாரி போட்ருச்சு.. !