‘திருமணத்தை பதிவு செய்ய இந்த டெஸ்ட் முக்கியம்’... 'புதிய சட்டம் கொண்டுவரும் மாநில அரசு'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, மணமக்கள் இருவரும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க, கோவா மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில், மற்றவர்களுக்கு, இந்த நோய் பரவாமல் தடுக்கும் வகையில், இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவா சுகாதாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் விஸ்வாஜித் ரானே, ‘கோவாவில் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, தம்பதிகளுக்கு எச்.ஐ.வி. பரிசோதனையை கட்டாயமாக்குவதே திட்டம். கடலோர மாநிலத்தில் சோதனையை கட்டாயமாக்குவதற்கான திட்டத்தை, கோவா சட்டத்துறை ஆய்வு செய்து வருகிறது.

இந்த யோசனைக்கு மாநில சட்டத்துறை ஒப்புதல் அளித்துவிட்டது. மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்த பிறகு, வரும் மழைக்கால கூட்டத்தொடரில் இதுதொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். அதன் பின்னர் சட்டம் அமுலுக்கு வரும். ஒரு சட்டத்துறை அமைச்சராக இருக்கும் நான், பொதுமக்களின் நலனுக்காகவே இந்த சட்டத்தை கொண்டுவர விரும்புகிறேன். எனினும், இது தற்போதைக்கு கட்டாயமில்லை’ எனத் தெரிவித்துள்ளார். கோவாவில் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 15-ம் தேதி தொடங்கவுள்ளது.

HIVTEST, GOA, MARRIAGE, REGISTRATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்