'யானையை' கொன்றவர்களை 'ஊரே தேடுகிறது...' 'துப்பு கொடுத்தால்' 'ரூ.1 லட்சம்' பரிசு... 'தனியார் நிறுவனம் அறிவிப்பு...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் யானையை வெடி வைத்து கொன்ற மர்மநபர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
யானைகளை தெய்வமாக மதிக்கும் கேரளாவில், கோவில் யானைகளுக்கு அளிக்கப்படும் மரியாதை காட்டு யானைகளுக்கு வழங்கப்படுவதில்லை. அவைகள் உணவுக்காக விவசாய நிலங்களை நாசப்படுத்துவதால் அவற்றை விரட்ட பல்வேறு யுக்திகளை கையாளுகின்றனர்.
ஊருக்குள் வரும் காட்டு யானைகளை ஒலி எழுப்பியும், வெடிகளை வெடிக்க வைத்தும் விரட்டுவது பொதுவான பழக்கமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் கும்கி யானைகள் மூலமும் காட்டு யானைகளை துரத்தும் பணி நடக்கும்.
ஆனால் கேரளாவின் திருவனந்தபுரம் வனப்பகுதிக்குட்பட்ட கூத்தப்பாடம் கிராமத்தில் புகுந்த காட்டு யானைக்கு நடந்த சம்பவம்தான் வன ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உணவு தேடி ஊருக்குள் வந்த யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் யாரோ மர்மநபர்கள் வெடி மருந்தை மறைத்து வைத்து உண்ண கொடுத்துள்ளனர். யானை உண்ண தொடங்கியதும் வெடி, வெடித்து யானையின் வாய் பகுதி சிதைந்து போனது. இதனால் தண்ணீருக்குள் இறங்கிய யானை அப்படியே தண்ணீரிலேயே இருந்தபடி உயிரிழந்துள்ளது.
கிராமத்திற்குள் புகுந்து பயிர்களை சேதமாக்கும் யானைகளை விரட்ட எத்தனையோ வழிகள் இருக்க இப்படியா செய்வது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அன்னாசி பழத்தில் வெடி வைத்து யானையை கொன்றது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யானை கொல்லப்பட்ட தகவல் அறிந்த முதல்வர் பினராயி விஜயன் வனத்துறை அமைச்சரை அழைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். யானையை கொன்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் கூறினார்.
யானை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மன்னார் காடு மண்டல வன அதிகாரி சுனில்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே யானையை வெடி வைத்து கொன்ற மர்மநபர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மற்ற செய்திகள்
3 லட்சம் 'காசு' போட்டு... 6 மாசம் 'கஷ்டப்பட்டு' இருக்கேன்... பொதுமக்களின் செயலால் 'கதறியழுத' மனிதர்!
தொடர்புடைய செய்திகள்
- "இது நமது கலாச்சாரமே இல்லை..." 'காரணமானவர்களை சும்மா விடமாட்டோம்...' 'மத்திய அரசு' மிக தீவிரமான ஒன்றாக இதை 'கையில் எடுத்துள்ளது...'
- 'இந்தியாவையே அதிரவைத்த கர்ப்பிணி யானையின் கொடூர மரணம்'... 'என்னதான் நடந்தது'?... பரபரப்பை கிளப்பியுள்ள புதிய தகவல்!
- ‘கர்ப்பிணி யானை கொலை...' "குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?..." 'பினராயி விஜயன் விளக்கம்...'
- என் "உலகமே" நீ தான்... எப்போவும் 'என்கூடவே' இரு... 'க்யூட்' பேபியும், 35 வயது யானையும்!
- "விஷமிகள் சிலர் கொடுத்ததை.. நம்பி உண்ட யானை.. வெடித்துச் சிதறிய அன்னாசிப்பழம்".. "அவளின் சிசுவைக் கையில் ஏந்தும்போது" நொறுங்கிப் போன பிரேத பரிசோதனை மருத்துவர்!
- 'படிப்புல ரொம்ப கெட்டிக்காரி... அவசர பட்டுடியே தங்கம்!'.. ஆன்லைன் வகுப்பை பார்க்க முடியாத விரக்தியில்... மாணவி எடுத்த 'மனதை' சிதறடித்த முடிவு!
- கொரோனா 'தனிமை'... 'அப்பா','அம்மா' அசந்த 'நேரம்' பாத்து... '11 மாத' குழந்தைக்கு நேர்ந்த சோகம்!
- ஊரடங்கை அமல்படுத்தியதில் நாட்டிலேயே 'சிறந்த' மற்றும்... 'மோசமான' மாநிலங்கள் இதுதான்!
- "அந்தப் புள்ள நல்ல படியா தேர்வு எழுதினா போதும்!".. ஒற்றை பள்ளி மாணவிக்காக... ஒட்டு மொத்த அரசும் உதவிய நெகிழ்ச்சி சம்பவம்!
- பாம்பு கடிச்சப்ப உத்ரா 'கத்தாதுக்கு' காரணம் என்ன?... கடைசியாக 'உண்மையை' உடைத்த கணவன்!