'தேசிய அளவில் முதலிடம் பிடித்த கேரள மாணவி.. 2-ஆம் இடத்தில் சென்னை மாணவர்’.. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியா10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ வழிக்கல்வி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று மதியம் 3 மணிக்கு வெளியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 29-ஆம் தேதி வரை நிகழ்ந்த சிபிஎஸ்இ வழிக்கல்வியிலான 10-ஆம் வகுப்புத் தேர்வை 27 லட்சம் பேர் எழுதியிருந்தனர். மிக அண்மையில்தான் 12-ஆம் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்று மதியம் 3 மணிக்கு வெளியான சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியானதோடு, இதில் 91.1 % மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த வருடம் 86.7 % பேர் தேர்ச்சி அடைந்ததை ஒப்பிட்டால், இந்த வருடம் நல்ல தேர்ச்சி விகிதம் என்றாலும் கடந்த சில ஆண்டுகளில் 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்ச்சி விகிதம் குறைந்துகொண்டே போவதைக் காண முடிகிறது. இதில் முதல் 3 இடங்களை திருவனந்தபுரம், சென்னை, அஜ்மீர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் கைப்பற்றியுள்ளனர். அதிலும் திருவனந்தபுரத்தில் 99.5 % மாணவர்களும், சென்னையில் 99% மாணவர்களும், அஜ்மீரில் 95.89 % மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆக இந்தத் தேர்வில், 499 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 7 மாணவர்கள், 6 மாணவிகள் உட்பட 13 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். 499 மதிப்பெண்கள் எடுத்து திருவனந்தபுரம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பாவனா சிவதாஸ் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதேபோல் சென்னை மாணவர் டி.யாஷாஸ் 498 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரு போட்டோ இல்லாததால்'.. நீட் தேர்வெழுத முடியாமல் தவித்த மாணவர்.. நெகிழவைத்த காவலரின் செயல்!
- மரப்பெட்டியில் ஒளிந்துக்கொண்டு கண்ணாமூச்சி.. விபரீதத்தில் முடிந்த விளையாட்டு.. மூச்சுத் திணறி சிறுமி பலி!
- குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய நபரால் சென்னையில் நடந்த கோர விபத்து.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- தற்கொலைக்கு முயன்ற கேரள தம்பதியினர்.. காப்பாற்றிய காவல்துறைக்கு பாராட்டு!
- ’தூங்காம அழுதுட்டே இருந்தா.. அதான்’.. 15 மாத பெண் குழந்தையைக் கொன்ற தாய்!
- 'இது சும்மா ட்ரைலர் தான்'...'மழை இருக்கானு கேக்காதீங்க'... 'வெதர்மேன்'!
- ‘இந்த டைம் தமிழில் தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழ்நாட்லயே நீட் எக்ஸாம்’.. ஹால் டிக்கெட் பிழைதிருத்தும் கடைசி தேதி இதான்!
- சட்டென்று மாறிய வானிலை அறிக்கை.. ‘வந்த வேகத்தில் யூ டர்ன் அடிக்கிறதா ஃபானி புயல்?’!
- 'பெண்ணை கொல்ல 'மனித வெடிகுண்டாக' மாறிய நபர்'...அதிரவைக்கும் சம்பவம்!
- இலங்கை குண்டுவெடிப்பு: சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கை.. எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை!