‘இப்போ உன்ன யாரு கல்யாணம் பண்றாங்கணு பாக்குறேன்’.. திருமணத்துக்கு மறுத்த காதலனுக்கு கொடூர தண்டனை கொடுத்த காதலி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணத்துக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த காதலனின் முகத்தை கத்தியால் சிதைத்த காதலியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவியும், மாணவர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அப்பெண் தனது காதலனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் பல்வேறு காரணங்களை கூறி இளைஞர் தொடர்ந்து திருமணத்தை தவிர்த்து வந்துள்ளார். சமீபத்தில் திருமணம் குறித்து கேட்டதற்கு, இளைஞர் தொழில் செய்ய விரும்புவதாக கூறி கல்யாணத்தை நிராகரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், கல்லூரிக்கு செல்லும்போது காதலனை வழி மறுத்துள்ளார். பின்னர், ‘நீ அழகா இருக்கண்ணுதான பெருமைப்பட்டுட்டு இருக்க, இப்போ யாரு உன்ன கல்யாணம் பண்ணுவாங்கணு பாக்குறேன்’ என கூறிக்கொண்டே மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலனின் முகத்தில் சரமாரியாக கிழித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த காதலன் அலறித்துடித்துள்ளார். காதலனின் முகத்தில் இருந்து ரத்தம் சிந்துவதைப் பார்த்ததும் அப்பெண்ணும் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். திருமணத்துக்கு மறுத்த காதலனின் முகத்தை காதலி கத்தியால் சிதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 2 மாதங்களுக்கு முன் ‘காணாமல்’ போனவர்... ‘எலும்புக்கூடாக’ கிடைத்த கொடூரம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்... ‘பரபரப்பு’ சம்பவம்...
- VIDEO: பட்டப்பகலில் போலீஸ் ஸ்டேஷன் முன் கத்தியால் குத்திச் சண்டை.. அம்பத்தூர் அருகே பரபரப்பு..!
- ‘அழுதுகிட்டே வீட்டுக்கு வந்த 5 வயசு சிறுமி’.. பதறி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப்போன தாய்.. டாக்டர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!
- நின்னு... நிதானமா... "எங்கப்பாவ கொலை செஞ்சவர"... மகன் செய்த பரபரப்பு சம்பவம்!
- கல்யாணத்துக்கு முன்தினம் மணப்பெண் எடுத்த விபரீத முடிவு..! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!
- பெட்ரோல் பங்க் மேனேஜர் மீது ‘நாட்டு வெடிகுண்டு’ வீசி கொலை..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!
- 'பாக்க மாடல் போல இருக்கும் இந்த 'சுதேஷ்' யாரு'?... 'டைரியில் இருந்த வார்த்தைகள்'... உறைந்து நின்ற போலீசார்!
- 'பெற்ற தாயை கொலை செய்த மகள்!'... 'உயிருக்கு போராடும் தம்பி'... 'இளம்பெண்ணின் கொலை வெறிக்கு காரணம் என்ன?'... 'பதபதைக்க வைக்கும் உண்மை சம்பவம்'...
- ‘மனைவி குளிக்கும்போது வீடியோ எடுத்த நண்பன்’.. ‘ப்ளான் பண்ணி கொலை செய்த கணவர்’.. அதிரவைத்த வாக்குமூலம்..!