‘ஆசையா வளத்தது வெட்டாதீங்க..’ வைரலான வீடியோவால்.. ‘சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்..’
முகப்பு > செய்திகள் > இந்தியாதான் ஆசையாக வளர்த்த மரங்களை வெட்டியதைப் பார்த்து சிறுமி ஒருவர் தேம்பி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

மணிப்பூர் மாநிலம் காக்சிங் நகரைச் சேர்ந்த இளங்பம் பிரேம்குமார் என்பவரது மகள் இளங்பம் வேலன்டினா தேவி (10). இவர் தனது வீட்டருகே இரண்டு குல்முகர் மரக்கன்றுகளை ஆசையாக நட்டு வைத்து வளர்த்து வந்துள்ளார். 4 ஆண்டுகளில் நன்றாக வளர்ந்திருந்த அந்த மரங்கள் கடந்த சனிக்கிழமை சாலை அகலப்படுத்தும் பணியில் வெட்டப்பட்டுள்ளது. அப்போது மரங்களை வெட்டவிடாமல் தடுத்து சிறுமி கதறி அழுதுள்ளார். பின்னர் மரங்கள் வெட்டப்பட்ட பிறகும் அதைத் தாங்க முடியாமல் சிறுமி தேம்பித் தேம்பி அழுதுள்ளார். இதை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட அது வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் உடனடியாக சிறுமி வேலன்டினாவை சந்தித்து அவருக்கு 20 மரங்களைக் கொடுத்து அதை நடுவதற்கான இடத்தையும் அளியுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறுமி வேலன்டினாவை மாநிலத்தின் பசுமை மணிப்பூர் இயக்க தூதராகவும் அவர் நியமித்துள்ளார். பசுமையை ஊக்குவிக்கும் மணிப்பூர் அரசின் அனைத்து விளம்பரங்கள், பிரச்சாரங்களிலும் இனி வேலண்டினாவின் புகைப்படம்தான் இடம்பெறும் எனவும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘டான்ஸ் வித் யுனிவெர்சல் பாஸ்’.. ‘சும்மா பொளந்து கட்டிய கோலி’.. வைரலாகும் வீடியோ..!
- ‘அதிரடி கிளப்பிய எடப்பாடியார்..!’ அடுத்த நடவடிக்கை என்ன..? ‘அதிர்ந்து போயிருக்கும் அரசியல் வட்டாரம்..!’
- ‘ஐஸ்கிரீமில் போதை மருந்து’.. ‘ரயிலில் டிக்கெட் பரிசோதகரால்..’ மாணவிக்கு நடந்த ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’
- ‘10 ம் வகுப்பு மாணவியுடன் காதல்’.. விரட்டி விரட்டி சரமாரியாக தாக்கிய கும்பல்..! பரபரப்பு சம்பவம்..!
- ‘4 வருஷமா வளர்த்தது’... ‘தேம்பி, தேம்பி அழுத சிறுமி’... வைரலான வீடியோவால் நடவடிக்கை!
- 'கயிற்றால் இறுக்கப்பட்டு, கழுத்து'.. ஒரு நொடியில் 'சிறுமி செய்த' காரியம்.. பதறவைத்த வீடியோ!
- ‘பிறந்தநாள் கொண்டாடிவிட்டு’ திரும்பிய பெண்ணை.. ‘கடத்திச் சென்ற கும்பல் செய்த..’ நடுங்க வைக்கும் காரியம்..
- 'பாக்ஸிங்' தந்தையால்.. '7 வயது மகளுக்கு'.. நேர்ந்த 'கொடூரம்'.. அதன்பின் கோர்ட் வாசலில் அரங்கேறிய சம்பவம்!
- ‘பீகாரில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட பள்ளி சிறுமி’.. சினிமாவை விஞ்சிய கடத்தல் நெட்வொர்க்..!
- ‘போலீஸ் யூனிஃபார்மில் எஸ்.ஐ செய்த காரியம்..’ பரபரப்பை ஏற்படுத்திய வைரல் வீடியோ..