குழந்தைக்கு இப்படி ஒரு பெயரா? ஆதார் கார்டில் பெயரை பார்த்து அதிர்ந்து போன அதிகாரிகள்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேசத்தில் பள்ளி ஒன்று சிறுமிக்கு அட்மிஷன் கொடுக்க மறுத்திருக்கிறது. சிறுமியின் ஆதர் கார்டில் இருந்த பெயர் தான் இந்த சிக்கலுக்கு காணமாக அமைந்திருக்கிறது.

Advertising
>
Advertising

அலுவலகத்தில் பில்கேட்ஸ் செஞ்ச சேட்டை.. பழைய வீடியோவை பகிர்ந்த பில் கேட்ஸ்..!

ஆதார் கார்டு

நாடு முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு ஆதார் கார்டு கட்டாயம் என முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலேயே அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மக்களுக்கு ஆதார் கார்டு தயாரிக்கும் பணிகள் நாடு முழுவதும் முயற்சிகள் முழுவேகத்தில் எடுக்கப்பட்டன. அரசு சலுகை துவங்கி பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பது என அனைத்திற்கும் ஆதார் கார்டு அவசியம் என்ற சூழ்நிலை வந்துவிட்டது. இருப்பினும் இந்த ஆதார் கார்டுகளில் சிலருக்கு பிழையான தகவல்கள் அச்சடிக்கப்படுவதால் சிரமங்களும் ஏற்படத்தான் செய்கின்றன.

அந்த வகையில் ஆதார் கார்டில் ஒரு சிறுமிக்கு தவறுதலாக பிழையான பெயர் இருக்க, அதனை காரணம் காட்டி பள்ளி நிர்வாகம் அந்த சிறுமிக்கு அட்மிஷன் கொடுக்க மறுத்துள்ளது. இந்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

வித்தியாசமான பெயர்

உத்திர பிரதேசத்தின் பில்சி தெஹ்சில் உள்ள ராய்பூர் கிராமத்தில் வசிப்பவர் தினேஷ். இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது மகள் ஆர்த்தியை பள்ளியில் சேர்க்க சென்றுள்ளார். அப்போது, ஆர்த்தியின் ஆதார் கார்டில் இருந்த பெயரை பார்த்து பள்ளி ஆசிரியர் ஏக்தா வர்ஷினி அதிர்ச்சி அடைந்ததோடு, சிறுமிக்கு அட்மிஷன் கொடுக்கவும் மறுத்துள்ளார்.

ஆர்த்தியின் ஆதார் கார்டில் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் 'மதுவின் ஐந்தாவது குழந்தை' என அச்சாகி உள்ளது. மேலும், அந்த கார்டில் ஆதார் எண்ணும் அச்சாகாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

இந்நிலையில் இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் தீபா ரஞ்சன், "அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் ஆதார் அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. அலட்சியத்தால் இந்த தவறு நடந்துள்ளது. வங்கி மற்றும் தபால் நிலைய அதிகாரிகளை எச்சரிப்பதுடன், அலட்சியத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

தற்போது அந்த ஆதார் கார்டு புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆற்றில் தத்தளித்த 9 பேர்.. தனி ஒருவனாக போராடி அனைவரையும் காப்பாற்றிய நபர்.. "குல சாமிப்பா நீ" .. நெகிழும் கிராம மக்கள்..!

AADHAAR CARD, GIRL, SCHOOL ADMISSION, NAME ON AADHAAR CARD, ஆதார் கார்டு, சிறுமி, வித்தியாசமான பெயர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்