கொரோனா 'அறிகுறியுடன்' சிகிட்சைக்கு வந்த 'சிறுமி'... மருத்துவமனையின் அலட்சியத்தால்... 'இறுதியில்' நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் மற்றும் கால் வலியுடன் 16 வயது சிறுமி ஒருவர் அம்மாநிலத்திலுள்ள அரசு மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் அந்த சிறுமிக்கு சிகிட்சையளித்த நிலையில் பரிசோதனை எதுவும் மேற்கொள்ளாமல் வெறும் மாத்திரைகளை மட்டும் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், அந்த சிறுமி சில தினங்களில் உயிரிழந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த போது கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. சிறுமியின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யாமல் இருந்த நிலையில் அந்த சிறுமி கொரோனா வைரஸ் மூலம் உயிரிழந்த சம்பவம் மக்களின் எதிர்ப்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், 'காய்ச்சல், கால் வலியுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சிறுமியை உரிய பரிசோதனை எதுவும் செய்யாமல் மருத்துவமனை தவறு செய்து விட்டது. இந்த சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்