10 முயற்சியும் தோல்வி.!. 11வது முறை விஷம் கொடுத்து காதலனை கொன்றாரா..? இளம்பெண் வழக்கில் பகீர்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கன்னியாகுமரியில் தமிழக கேரள எல்லை பகுதியில் ஷாரோன் ராஜ் என்ற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

Advertising
>
Advertising

இது தொடர்பாக நடந்த விசாரணையில், ஷாரோன் ராஜின் காதலியான கிரீஷ்மா தான் கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது உறுதியானது. கடைசியாக காதலி வீட்டிற்கு சென்றிருந்த ஷாரோன் ராஜ், கிரீஷ்மா கொடுத்த கஷாயத்தை குடித்துள்ளார். அதில் விஷம் கலந்திருந்த நிலையில், அதனை குடித்த ஷாரோன் ராஜ் வாந்தி எடுக்க தொடங்கி உள்ளார்.

தொடர்ந்து அவரது உடல்நிலையும் மோசமாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதும் பலனளிக்காமல் உயிரிழந்தார் ஷாரோன் ராஜ். இதன் பின்னர், விசாரணையில் கிரீஷ்மா தான் காரணம் என்பது தெரிய வர, அவரது தாய் மற்றும் உறவினர் ஒருவரையும் கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஷாரோனை கொலை செய்ததை கிரீஷ்மாவும் ஒப்புக் கொண்ட நிலையில், அவர் பயன்படுத்திய விஷ பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களையும் கிரீஷ்மாவின் வீட்டில் இருந்து போலீசார் கண்டெடுத்தனர்.

இதன் பின்னர், கிரீஷ்மாவை அழைத்து கொண்டு ஷாரோன் ராஜூடன் அவர் சுற்றித் திரிந்த இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பல் திடுக்கிடும் தகவல் வெளியானது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக, குளிர் பானத்தில் காய்ச்சலுக்கான மாத்திரைகளை அதிக அளவு கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றதாகவும், ஆனால் அதிலிருந்து ஷாரோன் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தப்பித்து விட்டதாகவும் கிரீஷ்மா கூறி உள்ளார்.


இதனையடுத்து, மொத்தம் 10 முறை குளிர் பானத்தில் மாத்திரைகளை கலந்து கொடுத்து முயற்சித்ததாகவும், இதற்கு தேவையான மாத்திரைகள் மற்றும் குளிர் பானங்கள் உள்ளிட்டவற்றை கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு என்னும் பகுதியில் உள்ள மருந்தகத்தில் இருந்து வாங்கியதாகவும் போலீசார் விசாரணையில் கிரீஷ்மா தெரிவித்துள்ளார்.

ஆனால், 10 முறையும் ஷாரோன் ராஜ் தப்பியதால் வீட்டிற்கு அழைத்து கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும் பரப்பரப்பு வாக்குமூலத்தை கிரீஷ்மா அளித்துள்ளார். அதே போல, ஷாரோன் மற்றும் கிரீஷ்மா ஆகியோர் ஒன்றாக சென்ற இடங்களுக்கு அழைத்து சென்று ஆய்வு செய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

KERALA, SHARON RAJ, GIREESHMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்