“பழமையான மொழி இருக்க.. ஏன் இந்தியில் பேசுனாரு?” - இது குஷ்பு. “ஜோக்கர்.. அவர் பேசுனது தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல!” - இது காயத்ரி! அனல் பறக்கும் ட்வீட்ஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா கோர தாண்டவம் ஆடிவரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்தும், 20 லட்சம் கோடி ரூபாயில் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் பற்றியும் நேற்றைய தினம் உரையாற்றினார்.

அதுமட்டுமல்லாமல் 4வது ஊரடங்கு உத்தரவினை மே 18-ஆம் தேதிக்கு முன்பே அறிவிக்கவுள்ளதாகவும், அந்த ஊரடங்கு வித்தியாசமானதாகவும், மாறுபட்டதாகவும் இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனிடையே அவ்வப்போது தனது ட்விட்டரில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டிருந்த காங்கிரஸ் பேச்சாளரும் நடிகையுமான குஷ்பு,  “பிரதமர் நேற்று எந்த மொழியில் பேசினார். நான் தமிழில் டைப் செய்வதில்லை என சொல்பவர்களுக்கு.. ட்விட்டர் சர்வதேச ஊடக தளம். இங்கு நான் தமிழில் டைப் செய்ய வேண்டும் என்றால், பிரதமர் தொன்மையான மொழி தமிழ் இருக்க, ஏன் இந்தியில் பேசினார்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில அளித்த நடன நடிகை காயத்ரி ரகுராம், “ஜோக்கர், நீங்கள் தமிழில் டைப் செய்யவில்லை. தங்க்லீஷில் டைப் செய்கிறீர்கள். தங்க்லீஷ் சமூக வலைதளங்களில் பேசுவதற்கான சர்வதேச மொழிவடிவம் கிடையாதே? பிரதமர் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பேசினார். தமிழ்நாட்டுக்கு மட்டும்

அல்ல!” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்