‘அதெல்லாம் நாங்க பாத்துப்போம்’.. ‘காஷ்மீர்’ பற்றி கருத்து தெரிவித்த அஃப்ரிடிக்கு.. ‘பதிலடி கொடுத்த பிரபல இந்திய வீரர்..’
முகப்பு > செய்திகள் > இந்தியாகாஷ்மீர் பிரச்சனை பற்றி கருத்து தெரிவித்த ஷாகித் அஃப்ரிடிக்கு முன்னாள் இந்திய வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி காட்டமாக ட்வீட் செய்துள்ளார்.
அந்தப் பதிவில் அஃப்ரிடி, “ஐ.நா. தீர்மானத்தின்படி காஷ்மீரிகளுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். நம் எல்லோருக்கும் இருப்பதுபோல அவர்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். ஐ.நா. எதற்காக நிறுவப்பட்டது? இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஐ.நா. தூங்குகிறதா? திடீரென ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பும், மனிதத்துக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளும் முடிவுக்கு வர வேண்டும். இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் தலையிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், பா.ஜ.க எம்.பி.யுமான கவுதம் கம்பீர், “ஆமாம் நீங்கள் சொல்வதுபோல அங்கே ஆக்கிரமிப்புகளும், மனிதத்துக்கு எதிராகக் குற்றங்களும் நடைபெறுகின்றன. ஆனால் அவை எல்லாமே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில்தான் நடக்கின்றன. வருத்தப்பட வேண்டாம். நாங்கள் அதை சரி செய்து விடுவோம்” என ட்வீட் செய்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பந்துவீசும் முன்பே 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்..’ தேர்வுக்குழுவை வறுத்தெடுத்த பிரபல வீரர்..
- 'இது போதும் எங்களுக்கு'... 'நெகிழ்ந்த ராணுவ வீரர்கள்'... 'அப்படி என்ன 'தல தோனி' செஞ்சாரு'?
- புதைந்து போனவர்.. ‘பூமியைத் தோண்டி உயிருடன் மீட்பு..’ மோப்பம் பிடித்த நாய்க்கு குவியும் பாராட்டுகள்..
- ‘போட்டிக்கு 200 ரூபாயில் இருந்து இந்திய அணி வரை..’ பிரபல ஐபிஎல் பௌலரின் அசத்தல் பயணம்..
- ‘தோனி மட்டும்தான் சிறந்த கேப்டன் என சொல்வது’... ‘தவறானது என்று கூறிய முன்னாள் வீரர்’!
- 'வேகமாக வந்த 'ஷார்ட் பிட்ச்' பால்'...'இளம் வீரருக்கு நேர்ந்த சோகம்'... அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்!
- ‘அவரோட ஓய்வு முடிவுக்கு இதுதான் காரணம்..’ விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்..
- 'கனவுக்கு எல்லையே இல்லை'.. நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த 'பீட்சா டெலிவரி' மேன்!
- 'என்னது?.. 7 பேர் வந்த, இந்திய ஹெலிகாப்டரை சுட்டதே இந்திய ஏவுகணை தானா?'.. அதிர்ச்சித் தகவல்!
- 'இது ஒர்த்து பாஸ்'... 'டீ குடிக்க 14,000 அடி' கூட போலாம்... வைரலாகும் புகைப்படங்கள்!