ஸ்டெம்புகளை தெறிக்க விட ப்ளான் பண்ண ஐடியா உண்மையாவே 'மாஸ்டர்' லெவல்...! 'அது மட்டும் பண்ணலன்னா நிலைமை கைமீறி போயிருக்கும்...' - புகழ்ந்து தள்ளிய கம்பீர்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நேற்று (21-04-2021) நடைபெற்ற ஐபிஎல் 15-வது போட்டியில் கொல்கத்தா அணியின் காட்டடி வேந்தர் ஆந்த்ரே ரஸல் அசால்டாக டீல் செய்துக் கொண்டிருக்கும்போது, யாரும் எதிரபாராத விதமாக சாம் கரன் அவரை விக்கெட் எடுத்தார். அந்த ஒன்று தான் சென்னை அணியின் வெற்றிக்கு திருப்பு முனையாக இருந்தது.

அவ்வாறு விக்கெட் எடுத்தது அருமையான ஒரு கண்கட்டு வித்தை, பிரமாதமாக ரஸலை ஏமாற்றினர் என்று கவுதம் கம்பீர், தோனியின் கேப்டன்சியைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

220 ரன்கள் என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி 35 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து முற்றிலும் நம்பிக்கை இழந்து போனது. பின்னர் இறங்கிய தினேஷ் கார்த்திக், ரஸல், பாட் கமின்ஸ் ஆகிய மூவரும் பேட்டை சுற்று சுற்று என சுற்றியது சென்னை அணியை அள்ளு விட வைத்தது. 19.1 ஓவரில் கடைசி வீரர் ரன் அவுட் ஆனதால் கமின்ஸ் 66 ரன்களில் ஆட்டமிழக்காமல் போட்டி முடிவுக்கு வந்தது. 

முடிய போகிறது என்று நினைத்த போட்டியை கார்த்திக், ரஸல், கமின்ஸ் அப்படியே திருப்பினர். சாம் கரனின் ஒரே ஒவரில் கம்மின்ஸ் பந்தை கிழிக்காத குறையாக அடித்து துவைத்தார்,

அதற்கு முன்னதாக ஆடிய ஆந்த்ரே ரசலை சாம் கரன் விக்கெட் எடுத்தது தான் சென்னை அணியின் வெற்றிக்கான திருப்பு முனை.

அதற்கு முன்பாக ஷர்துல் தாக்கூர் வைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை வீசி ரஸலின் மனநிலையை அந்த பந்துகளை எதிர்கொள்ளும் விதமாக பதிய வைத்தார். முழுதும் ஆஃப் சைடில் பீல்டிங் இறுக்கப்பட்டது, இதனால் சாம் கரன் வைடு ஆஃப் ஸ்டம்பில்தான் வீசுவார் என்று முன் கூட்டியே தீர்மானித்த ரஸல் ஆஃப் திசையில் ஒதுங்கி சாம் கரன் பந்தை எதிர்கொண்டார். தொடர்ச்சியாக அப்படியே ஆடியதால் சாம் கரனின் பந்தை ஆடாமல் விட்டார். அது ஸ்டம்புகளை தெறிக்க வைத்தது. இதனை அருமையான கண்கட்டு வித்தை என்று கம்பீர் கூறியுள்ளார்.

இதுபற்றி கம்பீர் தெரிவிக்கையில், என்னைப் பொறுத்தவரை ரஸல் விக்கெட் ஆனது  ஒரு கண்கட்டு வித்தை. வேறலேவல் ஐடியா அது. ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் அனைவருமே சாம் கரன் அந்தப் பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசுவார் என்றே கணித்தார்கள்.. ரஸலும் அப்படியாக தான் கணித்திருப்பார், எனவே அது லெக் ஸ்டம்ப் வைடு என்று ரஸல் ஆடாமல் விட பந்தை விட ஆனார்.

அவர் இன்னும் 4-5 ஓவர்கள் ஆடியிருந்தால் வெற்றி நிச்சயம் என்று அவர் உட்பட அனைவருக்கும் தெரியும். தான் களத்தில் நிற்கும் வரை ஆஃப் ஸ்பின்னருக்கு ஓவர் தரமாட்டார் தோனி என்பது ரஸலும் அறிவார். சாம் கரனின் அந்தப் பந்தை அவர் தடுத்தாடியிருந்தால் கொல்கத்தா வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கும். இவ்வாறு கம்பீர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்