"36 வருஷத்துக்கு முன்னாடி எல்லாத்தையும் விட்டுட்டு".. வைரல் கேப்ஷனுடன் கவுதம் அதானியின் மனைவி பகிர்ந்த Throwback புகைப்படம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய தொழிலதிபரும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரருமான கௌதம் அதானி இன்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரது மனைவி பகிர்ந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்தவர் கவுதம் அதானி. இவருடைய பெற்றோர் சாந்திலால் அதானி - சாந்தி ஆவர். உள்ளூரிலேயே பள்ளிக் கல்வியை முடித்த கவுதம் அதானி, குஜராத் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் சேர்ந்தார். ஆனால், இரண்டாம் ஆண்டே கல்லூரியை விட்டுவிட்டு பணிக்குச் சென்றுவிட்டார். துணி வியாபாரம் செய்துவந்த தனது தந்தையை அருகிலிருந்து பார்த்து வளர்ந்த அதானி 1988 ஆம் ஆண்டு அதானி எக்ஸ்போர்ட்ஸ் எனும் ஏற்றுமதி நிறுவனத்தை துவங்கினார். இதுவே, இன்று உலகளவில் பிரபலமான அதானி குழுமமாக வளர்ந்து நிற்கிறது. பிரீத்தி என்பவரை அதானி திருமணம் செய்துகொண்டார். அதானி அறக்கட்டளையை தற்போது ப்ரீத்தி நிர்வகித்து வருகிறார்.
போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அறிக்கையின்படி இவருடைய சொத்து மதிப்பு 98 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். பணக்காரர்களின் பட்டியலில் உலகளவில் ஐந்தாவது இடத்திலும் ஆசியாவில் முதல் இடத்திலும் இருக்கிறார் அதானி.
36 வருடங்களுக்கு முன்பாக
இன்று கவுதம் அதானி தனது 60 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவரது மனைவி பிரீத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில்,"36 ஆண்டுகளுக்கு முன்பு, நான் எனது வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு கௌதம் அதானியுடன் புதிய பயணத்தைத் தொடங்கினேன். இன்று, நான் திரும்பிப் பார்க்கும்போது, அவர் மீது அபரிமிதமான மரியாதை மற்றும் பெருமை மட்டுமே உள்ளது. அவரது 60வது பிறந்தநாளில், அவரது ஆரோக்கியத்திற்காகவும், அவரது கனவுகள் அனைத்தும் நனவாகவும் நான் பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனுடன் அதானியின் பழைய புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.
60 ஆயிரம் கோடி
அதானியின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு மக்கள் நலம் பெறும் வகையில் 60 ஆயிரம் கோடி ரூபாயை நன்கொடையாக அளிக்க இருப்பதாக அதானியின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இந்த தொகை அதானி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டு நாடு முழுவதும் கல்வி, மருத்துவம் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு இந்த தொகை செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 60-வது பிறந்தநாளுக்கு 60 ஆயிரம் கோடி நன்கொடை.. கஷ்டப்படும் மக்களுக்கு உதவ முன்வந்த அதானி.. நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள்..!
- டெய்லி 1,002 கோடி ரூபாய் வருமானம்...! 'அசுர' வளர்ச்சியில் இந்தியாவின் 2-வது பணக்காரர்...! - முதலிடத்தில் 'யாரு'னு தெரியுதா...?
- 'கண்ணிமைக்கும் நேரத்தில் காலியான 73 ஆயிரம் கோடி'... 'அதிர்ந்துபோன மொத்த பிசினஸ் உலகம்'... அதானிக்கு என்ன நடந்தது?
- 'இது என்ன மேஜிக்கா'... 'அசால்ட்டாக சேர்ந்த 1.18 லட்சம் கோடி'... அதானிக்கு எப்படி சாத்தியமானது?