என் புள்ள 'ஜெயில்'ல இருந்து 'ரிலீஸ்' ஆகுற வரைக்கும்... நம்ம 'கிச்சன்'ல இதெல்லாம் பண்ணவே கூடாது...! 'வேதனை'யில் கெளரி கான் போட்ட கண்டிஷன்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

என் மகன் விடுதலையாகி வரும் வரை சில விஷயங்கள் பண்ணக் கூடாது என கண்டிஷன் போட்டுள்ளாராம் ஷாருக்கானின் மனைவி கௌரி கான்.

என் புள்ள 'ஜெயில்'ல இருந்து 'ரிலீஸ்' ஆகுற வரைக்கும்... நம்ம 'கிச்சன்'ல இதெல்லாம் பண்ணவே கூடாது...! 'வேதனை'யில் கெளரி கான் போட்ட கண்டிஷன்...!

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி போதை வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஷாருக்கானின் குடும்பம் ஆர்யன் கானை ஜாமீனில் வெளியே கொண்டு வர பல்வேறு வகையில் முயற்சி செய்தாலும் இதுநாள் வரை ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

Gauri says sweets not made home until AryanKhan is released

அதோடு ஆர்யனுக்கு ஜாமீன் வழங்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆர்யன் கானை வைத்தே போதைப் பொருள் கூட்டத்தை கண்டுபிடிக்க வேண்டும் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாமீனை தள்ளுபடி செய்யும்படி கேட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை போதை மருந்து சப்ளையர் குறித்து கூட ஒரு விவரம் வெளிவரவில்லை.

Gauri says sweets not made home until AryanKhan is released

ஜாமீன் கிடைக்காததால் சிறையில் தவித்து வரும் தன் மகன் குறித்து ஷாருக்கானின் மனைவி கௌரி தூக்கமில்லாமல் இருக்கிறாராம். தன் மகன் விரைவில் வெளியே வர வேண்டி விரதம் இருந்தும் பூஜை செய்து வருகிறாராம்.

அதோடு, மதிய உணவுடன் பாயாசம் செய்த தங்கள் வீட்டு சமையல்காரரிடம் இனி ஆர்யன் வீட்டிற்கு வரும் வரை இனிப்பு வகைகள் எதுவும் செய்யக் கூடாது என கறாராக கூறியுள்ளார். தனக்கு யார் போன் செய்தாலும் சரி, மெசேஜ் அனுப்பினாலும் சரி, என் மகனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்ற கோரிக்கையை வைக்க தவறுவதில்லையாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்