'திட்டம் போட்டோம் .. 'பயிற்சி செஞ்சோம்' .. 'கொன்னோம்' .. அதிரவைக்கும் வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி உள்ளிட்ட ஆக்டிவிஸ்டுகளின் கொலைச் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டு பண்ணின. இதனைத்தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு, செப்டம்பர் 5-ஆம் தேதி பசவன்குடி லங்கேஷ் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து தன் வீட்டுக்கு புறப்பட்ட, அந்த பத்திரிகையின் ஆசிரியரான கௌரி லங்கேஷை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

நாடு முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களின் அழுத்தத்தின் பேரில் கர்நாடக போலீஸரும், சிறப்புப் புலனாய்வுப் பிரிவும் கண்டறிந்த தகவல்களின் அடிப்படையில், கௌரி லங்கேஷ் சுடப்பட்ட அதே பகுதியில்தான் நரேந்திர தபோல்கர், கல்புர்கி உள்ளிட்டோர் சுடப்பட்டுள்ளனர் என்று தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்த போலீஸார் கடந்த வருடம் 26 வயதான சரத் கலாஸ்கரை கைது செய்ததாகக் கூறியுள்ளனர்.

இவர்தான் நரேந்திர தபோல்கரையும் என்றும், சரத் கலாஸ்கார் என்கிற இவர் தந்த 14 பக்க வாக்குமூலத்தின் நகல் NDTV-யின் செய்திப் பிரிவில் உள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பதறவைக்கும் பின்னணிகள் அடங்கிய சரத் கலாஸ்காரின் வாக்குமூலத்தின்படி, கடந்த 2016-ஆம் வருடம் கர்நாடகாவின் பெல்கேமில் நடந்த கூட்டத்தில், குறிப்பிட்ட பெரும்பான்மை மதத்துக்கு எதிரான சமூக ஆர்வலகர்கள் அடங்கிய பட்டியலைத் தயார் செய்ததாகவும், அதில் கௌரி லங்கேஷின் பெயர் இடம் பெற்றதாகவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சரத் கலாஸ்காரின் நண்பர் பரத் குர்னேவின் வீட்டில் திட்டம் வகுக்கப்பட்டதாகவும், பின்னர் அங்குள்ள மலைப்பகுதியில் 15-20 தோட்டாக்களை பயிற்சிக்காக பயன்படுத்தியதாகவும் சரத் கலாஸ்கர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது.

அதோடு, ‘EVENT(நிகழ்வு)’என்று இந்த கொலைத் திட்டத்துக்கு பெயர் சூட்டப்பட்டதாகவும், திட்டப்படி 4 புல்லட்களை கௌரி லங்கேஷின் உடலில் இறக்கி சுட்டுக் கொன்றதன் பின்னர், மும்பை-நாஷிக் நெடுஞ்சாலை பகுதியில் 3  பாகங்களாக, துப்பாக்கியைக் கழற்றி வீசியதாகவும், அந்த பொறுப்பு மட்டும் பரசுராம் வாக்ஹ்மரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் வாக்குமூலத்தில் இருப்பதாக NDTV செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

GAURI LANKESH, MURDER, JOURNALIST, ACTIVIST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்