'இந்த விஷயத்த கவனிச்சீங்களா'?.. இந்தியாவில் பரவும் 'டெல்டா' ரக கொரோனா குறித்து... மருத்துவர்கள் வெளியிட்ட நடுங்கவைக்கும் தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்ட பேரழிவுக்கு காரணமான டெல்டா மரபணு மாற்ற வைரஸ் குறித்து மருத்துவர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 2020 அக்டோபர் மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பி.1.617 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று முதன் முறையாக கண்டறியப்பட்டது. பின்னர் மூன்று உப ரகங்களாக அது பிரிந்தது. இவற்றில் பி.1.617.2 என்ற ரகத்திற்கு உலக சுகாதார நிறுவனம் டெல்டா என்று பெயர் சூட்டியது. பி.1.617.1 ரகத்திற்கு கப்பா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் பரவும் இந்த டெல்டா ரக வைரஸும், உருமாறிய கொரோனா வைரஸின் மூன்ற உப ரகங்களும் கவலையளிக்கும் ரகம் என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியிருந்தது. இந்த மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் மிகவும் கவலையளிக்கும் ரகம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் பரவல் வேகம் மிக அதிகமாக உள்ளதால் இதை கவலையளிக்கும் ரகமாக வகைப்படுத்தியுள்ளது.
பல நாடுகளுக்கு பரவியுள்ள இந்த டெல்டா ரக வைரஸ் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறி இருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்ட பேரழிவுக்கு காரணமான டெல்டா மரபணு மாற்ற வைரஸ், நினைப்பதை விட மிகவும் கொடூரமானதாக இருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவில் டெல்டா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த அறிகுறிகளுடன், காது கேளாமை, தீவிர வயிற்றுக் கோளாறுகள், உறுப்புகள் சிதையும் அளவுக்கான ரத்தம் உறைதல் போன்ற புதிய விளைவுகளும் தோன்றுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
பிரிட்டனில் முதலில் காணப்பட்ட ஆல்ஃபா மரபணு மாற்ற வைரசை விட இந்தியாவில் பரவும் டெல்டா மரபணு மாற்ற வைரஸ், 50 சதவீத அதிக தொற்று ஏற்படுத்தும் திறனுடையது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா, காமா ரக மரபணு மாற்ற வைரஸ் தொற்றின் போது இது போன்ற மிகவும் ஆபத்தான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நீங்க ரெஸ்ட் எடுங்க...' 'எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம்...' 'கொரோனா வார்டில் செவிலியர்கள் செய்த சேவை...' - பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்...!
- இப்படி பண்றது 'அவங்களுக்கு' தான் பயங்கர ரிஸ்க்...! 'பெரிய ஆபத்துல போய் முடியும்...' - 'கடும் எச்சரிக்கை' விடுத்த உலக சுகாதார நிறுவன இயக்குனர்...!
- 'அண்ணே, யாரு அது'... 'கொரோனா வார்டுக்கு வெளிய சேர் போட்டு உக்காந்து இருக்காரு'... யாருன்னு தெரிஞ்சதும் திக்குமுக்காடி போன மக்கள்!
- ‘ஆல்பா வகையை விட ஆபத்தானது’!.. இந்தியாவில் ‘புதிய’ வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை..!
- 'கொரோனா இந்தியால இருந்து போகணும்னா...' கண்டிப்பா 'இந்த விஷயம்' நடக்கணும்...! - சீடர்களுக்கு 'குறி' சொல்லும் நித்தியானந்தா...!
- நுட்பமான ஓவியங்களை வரைந்த 'பிரபல ஓவியர்' கொரோனா தொற்றினால் மரணம்...! - கலைஞர்கள் இரங்கல்...!
- இந்தியாவில் கொரோனா 2-வது அலையால் ‘இங்கதான்’ பாதிப்பு அதிகம்.. என்ஜிஓ ஆய்வில் முக்கிய தகவல்..!
- தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு!.. தளர்வுகள் என்ன?.. எவை இயங்கும்? எவை இயங்காது?.. முழு விவரம் உள்ளே!
- சூழலியல் சிக்கலில் வண்டலூர் பூங்கா!.. வன உயிரினங்களையும் விட்டுவைக்காத கொரோனா!.. விளைவு என்ன?
- 'கொரோனா 3வது அலை... குழந்தைகளுக்கு அச்சுறுத்தல்'!.. 'அதுக்காக தான் 'இந்த' முடிவு எடுத்திருக்கோம்!.. எய்ம்ஸ் இயக்குநர் திட்டவட்டம்!