'சுத்தமாயிடுச்சுனு சொல்லாதீங்க.. இங்க வந்து பாருங்க!'.. கங்கை நதியை ஆராய்ந்த அதிகாரிகள்... இந்தியாவையே கொண்டாட்டத்தில் திளைத்த சம்பவம்!.. என்ன நடந்தது தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா ஊரடங்கால் மாசு இல்லாத காரணங்களால் கங்கை நதி தூய்மையாக உள்ளது. இது குடிப்பதற்கு ஏற்ப தரம் உயர்ந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆயிரக் கணக்கான நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்களும் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே உள்ள வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. 7 புனித நகரங்களுள் ஒன்றான வாரணாசி (காசி) யில் கங்கை நதி உள்ளது. காசி புண்ணிய ஸ்தலம் என்பதால் பலரும் கங்கையில் நீராடிச் செல்லுவர். மேலும் இறந்தவர்களின் உடல்களையும் கங்கையில் வீசுவதையும் காணமுடிகிறது.
அதுமட்டுமின்றி பல தொழிற்சாலைகளின் கழிவுகள் , குப்பைகள் மற்றும் , பூஜை பொருட்கள், மனிதர்களின் அசுத்தமுறை போன்றவற்றால் கங்கை நதியின் தூய்மை மாசடைந்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசும் மாநில அரசும் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதனால் தற்போது ஊரடங்கு காலங்களில் கங்கை நீர் சுத்தமாக உள்ளது. கங்கை நதியின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நீரின் தரத்தை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், நேற்று முன்தினம் சோதனை செய்தது.
அப்போது, நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு கணிசமாக உயர்ந்துள்ளதும், மக்கள் குடிப்பதற்கு தகுதி வாய்ந்த நீராக, கங்கையில் பல பகுதிகள் மாறி இருப்பதையும், ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர். இது குறித்து, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த தலைவர் கூறியதாவது, "இந்த முழு அடைப்பு காலகட்டத்தில், கங்கை நதியின் பெரும்பாலான பகுதிகளில், நீரின் தரம் பலமடங்கு உயர்ந்துள்ளது உண்மை தான். இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம், தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பது தான்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப் படும் கழிவு நீர், நதிகளில் கலப்பதும், அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கழிவு நீரை நதிகளில் கலக்க செய்வதுமே, பெரும்பாலான நதிகள் மாசு அடைவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. மேலும், தொழிற்சாலைகளில் தேவைகளுக்காக, கங்கையில் இருந்து நீர் எடுப்பதும் நின்றுள்ளது. அறுவடை காலம் என்பதால், விவசாயத்திற்கு நீர் எடுக்கப்படவில்லை. இதனால், நதியில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது.
இயற்கையை சீண்டாமல், அதன் போக்கிலேயே விட்டுவிட்டால், அது மீண்டும் தன் இயல்பு நிலையை எட்டும் என்பதற்கு, இது மிகச் சிறந்த உதாரணம். ஊரடங்கு காலகட்டத்தில், கங்கை மற்றும் யமுனை நதிகளின் தரம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை, வாரியம் விரைவில் வெளியிடும். நதிகளை மாசு இன்றி பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் புரிந்து கொள்ள வேண்டிய நேரமிது. இவ்வாறு, அவர் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நல்ல 'உணவு' குடுக்குற அளவுக்கு 'வருமானம்' இல்ல... என்னால 'முடிஞ்சது' இதுதான்!
- 'கைகொடுத்தது பிளாஸ்மா சிகிச்சை...' 'டெல்லியில்' குணமடைந்த '49 வயது' நபர்... 'இந்தியாவில் முதல் வெற்றி...'
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- இனி ‘இவங்களுக்கும்’ கொரோனா டெஸ்ட் நடத்த போறோம்.. தமிழக அரசு ‘அதிரடி’ முடிவு..!
- 'சென்னை'யில் பேருந்து சேவை... 'இந்த' தேதியில் இருந்து தொடங்குகிறதா?... 'பயணிகளுக்கு' பயங்கர கட்டுப்பாடுகள் விதித்த போக்குவரத்துக்கழகம்!
- 'பொண்டாட்டி' தொல்லை 'தாங்க முடியலை சார்...' 'தயவு செஞ்சு காப்பாத்துங்க...' 'முதலமைச்சருக்கு' ஆண்கள் பாதுகாப்பு சங்கம் 'கோரிக்கை...'
- '15 பக்கங்களுக்கு செய்திகளே இல்லை!'.. செய்தித்தாளைப் பார்த்து நொறுங்கிப் போன மக்கள்!.. அமெரிக்காவை உறையவைத்த துயரம்!
- 'தெலுங்கானா' டூ சொந்த 'ஊர்'... நடந்தே வந்த '12 வயது' சிறுமி... வீட்டை நெருங்குகையில் நடந்த... 'துயர' சம்பவம்...!
- 'ஒரு பக்கம் ஐடி'... 'மறுபக்கம் இடியாய் விழுந்த செய்தி'... 'கலங்க வைத்த புதிய ரிப்போர்ட்'... நிம்மதியை இழந்த அமெரிக்க மக்கள்!
- 'சென்னை'யோட இந்த பகுதில தான்... கொரோனா பாதிப்பு 'ரொம்ப' அதிகமாம்!