"அப்பா என்ன கடத்திட்டாங்க.. 5 லட்சம் வேணுமாம்".. போனில் அழுத மகன்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலத்தில் தன்னை கடத்தி விட்டதாக நாடகமாடி பெற்றோரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் சுருட்ட திட்டமிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியை சேர்ந்தவர் வருண் நாயக். 25 வயதான இவர் சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். ஆனால், இரவு ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வருண் நாயக்கின் பெற்றோர், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்திருக்கிறார்கள். காவல்துறைக்கு செல்வதுதான் சரியான முடிவு என அவர்கள் நினைத்த நேரம் அவர்களுக்கு ஒரு போன் வந்திருக்கிறது. அவர்களது மகன் வருண் அழுதபடி பேசவே இருவரும் கலவரமடைந்திருக்கிறார்கள்.

5 லட்சம் பணம் வேணும்

போனில் அழுதபடி பேசிய வருண், தன்னை சிலர் கடத்திவிட்டதாகவும் 5 லட்சம் பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியான வருணின் பெற்றோர், உடுப்பி காவல் நிலையத்திற்கு சென்று இதுகுறித்து புகார் அளித்திருக்கின்றனர். உடனடியாக வருணை தேடும் பணியில் இறங்கிய காவல்துறையினர் அவரது செல்போனை டிராக் செய்ய துவங்கினர்.

சந்தேகம்

வருணின் செல்போனை டிராக் செய்கையில் அது கோவா மாநிலத்தில் இருப்பதை கண்டறிந்து காவல்துறையினர் சந்தேகமடைந்தனர். இந்நிலையில், கோவாவின் மண்டோவி ஆறுக்கு அருகே அமைந்திருந்த சூதாட்ட விடுதியில் வருண் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக கைது செய்யப்பட்ட அவர், கடந்த செவ்வாய்க்கிழமை உடுப்பிக்கு  அழைத்து வரப்பட்டிருக்கிறார்.

இதனையடுத்து வருணிடம் காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் கூறிய தகவல்கள் அதிகாரிகளை திகைக்க வைத்திருக்கிறது. ஆரம்பம் முதலே சூதாட்டங்களில் ஆர்வம் மிகுந்த வருண், நண்பர்களுடன் சேர்ந்து கோவா செல்ல திட்டமிட்டிருக்கிறார். வீட்டை விட்டு வெளியேறி கோவா சென்றதும் தான் கடத்தப்பட்டதாகவும் 5 லட்சம் பணம் கொடுக்கும்படியும் தனது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார் வருண். இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள் வருணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட, தான் கடத்தப்பட்டதாக இளைஞர் தனது பெற்றோரை மிரட்டி பணம் பறிக்க முயன்று கைதாகி இருப்பது அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

KARNATAKA, POLICE, GAMBLING, கர்நாடகா, உடுப்பி, போலீஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்