"பள்ளிகளை திறக்கலாம்.. 'இந்த' வகுப்பு மாணவர்கள் மட்டும் வரலாம்!".. தேதி, பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த அரசு!
முகப்பு > செய்திகள் > இந்தியாசெப்டம்பர் 21-ஆம் தேதி முதல், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுள் விருப்பமுள்ளவர்கள் பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அத்துடன் கடைபிடிக்க வேண்டிய சில வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கட்டாய முகக்கவசம், வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையில் 6 அடி இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அடிக்கடி கைகளை சோப்புப் போட்டோ, ஒருவேளை கைகள் அழுக்காக இருந்தால் ஆல்கஹால் கலந்த சானிட்டைசர் கொண்டோ கைகளைக் கழுவ வேண்டும் என்றும் இருமல், சளி தொந்தரவுள்ள மாணவர்கள் கைக்குட்டை, துடைப்புக் காகிதம் கொண்டு உரிய பாதுகாப்பு நடிவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்பறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டால் தாமாக முன்வந்து உடனே ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்துவதுடன், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் ஆரோக்கிய சேது செயலியை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுள் விரும்பும் மாணவர்கள் பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன், பள்ளிக்கு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா கட்டுப்பாட்டு மையத்துக்கு வெளியே இருக்கும் பள்ளிகள் மட்டுமே திறக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடம் தொடர்பான கலந்துரையாடல்களை திறந்தவெளி பகுதிகளில் மேற்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்தியர்கள் உட்பட 13,000 பேர் வேலை செய்யத் தடை'... 'கொரோனா அச்சுறுத்தலால்'... 'அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள நாடு!'...
- 'அசாதாரணமான வரலாற்று சோதனையை கடந்துட்டோம்!'.. 'நம்ம நடவடிக்கைதான் பல்லாயிரக்கணக்கான உலக உயிர்களை காப்பாத்தியிருக்கு!'.. சீன அதிபர் புளங்காகிதம்!
- 'மருத்துவர்களுடன் நடந்த முக்கிய ஆலோசனை'... '2,000 மினி கிளீனிக்'... முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்!
- 'இந்த தடுப்பூசியால'... '90 சதவிகிதம் பேருக்கு ஆன்டிபாடிகள் அதிகரிச்சிருக்கு'... 'இது மட்டும் வெற்றியடைஞ்சா'... 'வெளியாகியுள்ள குட் நியூஸ்!'...
- 'மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி'... 'அடுத்தடுத்த அதிரடிகளால்'... 'ஆச்சரியம் கொடுக்கும் நாடு!'...
- "கொரோனா எல்லாம் ஒன்னுமே கிடையாது... 3 வேளையும் 'சூப்பர்' சாப்பாடு!.. கேரம் போர்டு, தாயம்..." - கொரோனா முகாமில் இருந்து பெண்கள் 'பரபரப்பு' தகவல்!
- 'கொரோனா கடைசி கிடையாது'... 'அடுத்த பெருந்தொற்றுக்கு'... 'இன்னும் தயாரா இருக்கணும்'... 'முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ள WHO தலைவர்!'...
- 'எதிர்ப்பாக்காத சர்ப்ரைஸ் கொடுத்த கூகுள்'... 'வாயடைத்து போன கூகுள் ஊழியர்கள்'... 'எங்களுக்கும் இத செய்ங்க'... கேட்க தொடங்கிய மற்ற நிறுவன ஊழியர்கள்!
- "வீட்டுக்கு வா.. கொரோனா நெகடிவ்னு ரிப்போர்ட் தர்றேன்!".. சுகாதார ஆய்வாளரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தின் விலை என்ன?.. எப்போது கிடைக்கும்?.. பிற நாடுகளில் 'இது' தான் நிலவரம்!