'அச்சுறுத்தும் கொரோனா'... 'இந்திய மக்களே பயப்படாதீங்க, கொஞ்சம் திரும்பி பாருங்க'... நெகிழ வைத்துள்ள பிரான்ஸ் அதிபர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பல உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நோய் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகப் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநிலங்களின் முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இந்திய மக்களுக்காக நாங்கள் எப்போதும் துணை நிற்போம் என பிரான்ஸ் நாடு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், ''இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இந்திய மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். இந்த அசாதாரண சூழலில் பிரான்ஸ் உங்களுடன் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் இந்தியாவுக்கு உதவத் தயாராக உள்ளோம்'' என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதாகச் செய்திகள் பரவி வரும் நிலையில் பிரான்ஸ் தனது ஆதரவை இந்தியாவுக்கு வழங்கி உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பல உலக நாடுகளும் இந்தியாவுக்குத் துணை நிற்பதாகத் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்