'10 ரூபாய்க்கு 4 சப்பாத்தி, ருசியான குருமா...' ஏழை மக்களின் பசியை ஆற்ற...' அரசின் நடமாடும் உணவகம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தொண்டு நிறுவனங்களோடு இணைந்து, பத்து ரூபாய்க்கு 4 சப்பாத்தி மற்றும் குருமா கொடுத்து ஏழைகளின் பசியை தீர்த்து வரும் புதுச்சேரி மாவட்ட நிர்வாகத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போதைய கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், வேலைக்கு செல்ல முடியாத சூழலில், ஒரு சில குடும்பங்கள் தன் அன்றாட தேவைகளுக்கு கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை போக்கும் வகையில் புதுச்சேரியின் மாவட்ட நிர்வாகம் வள்ளலார் சன்மார்க்க சங்கம் சார்பில் உணவு தயாரிக்கப்பட்டு தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களின் பசியை போக்கி வருகின்றனர்.

சாலைகளில் வசிப்போருக்கும், மிகவும் நலிவடைந்தவர்களுக்கும் இலவசமாகவே சப்பாத்திகளை வழங்குகின்றனர். இது மட்டுல்லாமல் மலிவு விலை நடமாடும் உணவகமும் திறக்கப்பட்டுள்ளது.

தினமும் மாலையில் மக்களுக்கு கொடுக்க, ஒரு மணி நேரத்திற்கு 1000 சப்பாத்தி என்கிற வீதம், ஆதித்யா  தனியார் கல்வி நிறுவனம் தனது நவீன கேண்டீனில் தயாரித்து வழங்குகின்றனர். உயர் தர வகையில்  தயாரிக்கப்படும் 4 சப்பாத்தி மற்றும் சூடான ருசியான குருமா 10 ரூபாய்க்கு அளிக்கப்படுகிறது.

முதலில் 2000 பேருக்கு தேவைப்படும் சப்பாத்திகளை தயாரித்து கொடுத்த நிறுவனம், தற்போது தேவை அதிகமாகி வருவதால் 4000 சப்பாத்தி தயாரிக்கப்படுவதாக துணை தாசில்தார் செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் வாழும்  மக்களின் துயர் நீக்க குறைந்த விலையில் உணவுகளைக் கொண்டு செல்லும் அரசின் இந்த நடமாடும்  உணவகத்திற்கு வரவேற்பு அதிகரிப்பதால் சாம்பார் சாதம், வெஜிடபிள் பிரியாணி மற்றும்  தயிர்சாதம் போன்ற உணவுகளையும் 10 ரூபாய்க்கு வழங்க அரசு முயற்சி செய்து வரும் நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்