600 'ஏடிஎம்'ல ஆட்டைய போட்டு... வீடு, 'கார்'னு ஜாலியா இருந்துருக்காங்க... 2 வருடத்திற்கு பின் துப்பு துலங்கிய 'கேஸ்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த நான்கு பேர் இரண்டு ஆண்டுகளில் ஏடிஎம் மூலம் பல லட்ச ரூபாய் மோசடி செய்து ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த நிலையில், போலீசார் தற்போது அவர்களை கைது செய்துள்ளனர்.

இன்று வங்கியில் நடக்கும் பண பரிவர்த்தனைகளை எளிமையாக்க மொபைல் போன் மற்றும் ஏடிஎம் போன்றவை முக்கிய பங்கு வகிக்கும் அதே நேரத்தில் அதன் மூலம் பல மோசடிகளும் அரங்கேறுகின்றன. அப்படி மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் சில வருடங்களுக்கு பிறகு பிடித்துள்ளனர். 2016 முதல் 2018 ஆண்டுகளுக்கு இடையில் நான்கு பேர், சுமார் 600 ஏடிஎம் வரை மோசடியில் ஈடுபட்டு பணத்தினை சுருட்டியுள்ளனர்.

டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இந்த 4 பேரும் கைவரிசையை காட்டியுள்ளனர். ஒரு ஏடிஎம் மூலம் சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை திருடியுள்ள நிலையில், நான்கு பேரில் 2 பேர் அதில் கிடைத்த பணம் மூலம் இரண்டு பேர் சொந்த வீடு மற்றும் கார் ஆகியவற்றையும் வாங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்