கல்விக்கு வயது தடை அல்ல.. 87 வயசுல 10-வது பாஸ்.. முன்னாள் முதல்வரின் விடாமுயற்சி.. குவியும் வாழ்த்துக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா தனது விடாமுயற்சியின் பலனாக 87 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். இதனையடுத்து சமூக வலை தளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
கல்வி
உலகின் விலைமதிக்க முடியாத சொத்து கல்வி தான் என சொல்லாத மதங்களோ, புராணங்களோ உலகில் கிடையாது. அப்படிப்பட்ட கல்வியை பிச்சை எடுத்தாவது கற்றுவிடவேண்டும் என்கிறது தமிழ் இலக்கியம். கல்விக்கு வயது ஒரு தடை கிடையாது என்பதை உலகம் முழுவதும் பல்வேறு நபர்கள் நிரூபித்து காட்டியுள்ளனர். அந்த நெடிய பட்டியலில் தற்போது இணைந்திருக்கிறார் ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர் தன்னுடைய 87 வயதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
ஓம் பிரகாஷ் சவுதாலா
1935 ஆம் ஆண்டு, ஜனவரி 1 ஆம் தேதி, பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவருடைய தந்தை தேவிலால், இந்தியாவின் துணைப் பிரதமராகவும் ஹரியானா மாநிலத்தின் முதல்வராகவும் இருந்தவர். சிறுவயது முதலே அரசியலில் ஈடுபட்டுவந்த ஓம் பிரகாஷ் சவுதாலா, ஹரியானா மாநிலத்தின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக உருவெடுத்தார்.
தொடர்ந்து 4 முறை அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த போதிலும், கல்வியை தொடர முடியாத வருத்தம் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு இருந்திருக்கிறது. இதனால் முதுமையடைந்த பிறகும் கல்வி கற்க முடிவெடுத்தார் இவர்.
தேர்ச்சி
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓப்பன் ஸ்கூல் -ல் 2017 ஆம் ஆண்டு இணைந்த ஓம் பிரகாஷ் சௌதாலா 2019 ஆம் ஆண்டு தனது 10 ஆம் வகுப்புத் தேர்வில் பங்கேற்றார், ஆனால் ஆங்கிலத் தாளை அவரால் எழுத முடியாமல் போனது. இதன் காரணமாக அவரது 12 ஆம் வகுப்புக்கான தேர்வு எழுதும் வாய்ப்பும் தடைபட்டது. இதனையடுத்து, தொடர்ந்து விடாமுயற்சியுடன் படித்துவந்த சவுதாலா தற்போது 10 மற்றும் 12-வது வகுப்புகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
குவியும் வாழ்த்துக்கள்
நடிகர் அபிஷேக் பச்சன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த 'தாஸ்வி' (Dasvi) திரைப்படத்திலும், அரசியல்வாதி ஒருவர் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற படிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 87 வயதில் சவுதாலா 10 மற்றும் 12-வது தேர்ச்சி பெற்றுள்ளதால், அப்படத்தில் நடித்திருந்த அபிஷேக் பச்சன் மற்றும் நிம்ரத் கவுர் ஆகியோர் சவுதாலாவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
நிம்ரத் கவுர் தனது டிவிட்டர் பக்கத்தில்,"அற்புதம். வயது என்பது உண்மையில் ஒன்று அல்லது இரண்டு இலக்கம் கொண்ட எண்கள் மட்டுமே" எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, அபிஷேக் பச்சனும் சவுதாலாவிற்கு டிவிட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
காஷ்மீரை சேர்ந்த அரசியல் தலைவரான ஒமர் அப்துல்லா,"கல்வி கற்க ஒருவருக்கு வயது தடையில்லை. வாழ்த்துக்கள் சவுதாலா சாப்" எனக் குறிப்பிட்டுள்ளார். தனது 87 வயதில், ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதையடுத்து சமூக வலைத்தளங்களில் பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இந்தாங்க கோவில் பிரசாதம்".. மர்ம நபர் கொடுத்த பானம்.. பக்தியோடு பருகிய மக்களுக்கு நேர்ந்த சோகம்..
- மூணு வருஷத்துல 5 மெர்சிடஸ் கார்.. ஒருத்தர ஏமாத்தணும்னா மொதல்ல நம்ப வைக்கணும்.. பக்காவா பிளான் பண்ணி ரூ. 2.18 கோடி மோசடி செய்த நபர்
- 'ஜிம் போகல...' 'டயட் இருக்கல...' 21 கிலோ மெலிஞ்சுட்டேன்...! எல்லாத்துக்கும் காரணம் 'அவ' தான்...! - 'கண்ணீர்' வடிக்கும் கணவன்...!
- 'இந்தியால நீங்க அனுபவிக்குற சந்தோஷம்...' 'அங்க' போனா கிடைக்க சான்ஸே இல்ல...! - மெகபூபா முப்திக்கு 'பதிலடி' கொடுத்த அமைச்சர்...!
- 'வீட்டை விட்டு ஓடிப்போறவங்களுக்கு...' 'இங்கு திருமணம் செய்து வைக்கப்படும்...' அசர வைக்கும் பேக்கேஜ்கள், சலுகைகள்...' - குவியும் இளசுகள்...!
- தனியார் கம்பெனி ‘வேலைவாய்ப்பு’ 75% உள்ளூர் மக்களுக்குதான்.. மாநில அரசு ‘அதிரடி’.. செம ‘குஷியில்’ இளைஞர்கள்..!
- “இதுக்குன்னே தனி மொபைல் ஆப்.. மினிமம் டெபாசிட் கட்டி ஆடணும்”.. கோடிகளில் புரளும் ஐபிஎல் சூதாட்டம்!.. பெங்களூரு, ஹரியானாவில் பரபரப்பு!
- 'ஓடும் பேருந்தில் இளைஞரை பெல்ட்டால் அடித்த 2 சகோதரிகள்'... 'சுக்குநூறான இளைஞரின் கனவு'... வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஒரே ஒரு வீடியோ!
- "அப்பாவையும் மனைவியையும் காணும்!".. இரவு முழுவதும் தேடிய நபர்.. சிசிடிவியில் கண்ட அதிர்ச்சி காட்சி!.. அதற்கு முதல் நாளே ‘வீட்டில் இருப்பவர்களுக்கு’ மயக்க மருந்து கொடுத்த மனைவி!
- “அக்கா லைவ் வீடியோ கால் பேசிட்டே இருந்தா... திடீர்னு கட் ஆச்சு!”.. மறுமணம் செய்யவிருந்த இளம் பெண்.. நேரில் சென்ற தங்கை.. வீட்டில் கண்ட அதிர்ச்சி காட்சி!