'முன்னாள் மத்திய நிதி அமைச்சர்'... 'அருண் ஜெட்லி' காலமானார்...எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!
முகப்பு > செய்திகள் > இந்தியாஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலமானார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினையால் கடந்த 9-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை. இதற்கிடையே திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றின் உதவியுடன் சிகிச்சையில் இருந்து வந்தார்.
இதனிடையே பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாஜக மூத்ததலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து மருத்துவமனையில் சென்று விசாரித்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில்,ஜெட்லியின் உடல்நிலை நேற்று இரவிலிருந்து மிகவும் மோசமடைந்து வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன இந்த நிலையில் அவர் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து உள்ளது. அவரது மறைவு பாஜக கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இப்டி யாரும் கோரிக்கை வச்சிருக்க மாட்டாங்க’.. ‘உடனே நிறைவேற்றிய நிர்மலா சீதாராமன்’.. குவியும் பாராட்டுக்கள்..!
- 'இவரும்.. அவரும்.. கிருஷ்ணரும் அர்ஜூனரும் மாதிரி'.. 'ஆனா.. இதுல'.. ரஜினி சொன்ன பஞ்ச்!
- ‘அக்கா.. அந்த ப்ராமிஸ் நடக்காமலே போச்சே’... ஸ்மிருதி இரானியின் உருக்கமான ட்வீட்!
- 'இனிமே'.. 'காஷ்மீர்ல இருக்குற ஒயிட் ஸ்கின்' பொண்ணுங்கள 'கல்யாணம் பண்லாம்'. . BJP MLA அதிரடி!
- 'மொட்ட அடிச்சி வெள்ள சேலை உடுத்தி'...'பிரபல பெண் தலைவருக்கு எதிரா'...'சுஷ்மா' சொன்ன வார்த்தை!
- முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!
- 'அப்சொல்யூட்லி'.. 'என்னா ஒரு வரலாறு காணாத டெசிசன்'.. 'என்னோட சப்போர்ட் கண்டிப்பா உண்டு'!
- 'என்ன ஆனார் 'கஃபே காபி டே' நிறுவனர்'... தற்கொலையா?... அதிர்ச்சியில் உறைந்துள்ள குடும்பம்!
- 'ஹே ஹே.. நம்மள பாக்க ஒரு ஸ்பெஷல் ஃபிரண்ட் வந்தாப்டி'.. குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் மோடி!
- 'எம்.பியானது உங்க வீட்டு டாய்லெட்ட கழுவ இல்ல'.. சர்ச்சைக்குரிய பேச்சால் பிரக்யாவுக்கு 'நடந்தது இதுவா?'