‘அந்த மனசுதான்’...!!! ‘இவ்ளோ உயரத்துக்கு கொண்டு போயிருக்கு’... ‘தனி ஒருவராக இந்திய மனிதரின் சாதனைக்கு!!’... 'அமெரிக்காவில் கிடைத்த வெகுமதி’!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனி ஒருவராக சாதனை புரிந்த, அசாமைச் சேர்ந்த 57 வயது விவசாயி ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு, அமெரிக்க பாடப்புத்தகங்களில் பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது.
கிழக்கு அசாமில் உள்ள மஜூலித் தீவின் சுற்றுச்சூழல் கெடுதலைக் குறித்து சிறுவயதிலேயே கவலைகொள்ளத் தொடங்கினார் ஜாதவ் பயேங். அதனை நினைத்து வருந்திக் கொண்டிருக்காமல், மனது வைத்து மரங்களை நடத்தொடங்கி காடுகளாக வளரும் வகையில் செயல்பட்டார் ஜாதவ் பயேங். தன் ஈடு இணையற்ற உழைப்பைச் செலுத்தி தனி ஒருவராக 550 ஹெக்டேர் காட்டை உருவாக்கிக் காட்டினார் ஜாதவ் பயேங். அடர்ந்த காடுகளால் அங்கு யானை, காண்டாமிருகம், புலி என பல விலங்கினங்களும் அக்காட்டுப் பகுதிக்குள் வாழத் தொடங்கிவிட்டன.
தரிசு மணல் பகுதியில், அடர்த்தியான ஒரு காட்டையே உருவாக்கியதால் ’Forest man of India' என்று அழைக்கப்படும் இவரின் அளவில்லாத சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ பட்டமும், கர்மயோகி விருதும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் பிரிஸ்டெல் கனெக்டிக்கட்டில் இருக்கும் பள்ளிகளின் 6- ம் வகுப்பு பாடத்திட்டத்தில் அசாம் ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.
அங்குள்ள மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வியில் ஒரு பகுதியாக ஜாதவின் சாதனைகளைக் குறித்து படிக்கிறார்கள் என அங்கு பணிபுரியும், இந்திய வம்சாவளி ஆசிரியர் நவாமி சர்மா தெரிவித்திருக்கிறார். ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை குறிப்பு, மாணவர்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறையை ஊக்கப்படுத்தும் என்று ஆசிரியர் நவாமி சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். எதையும் மனது வைத்து செய்தால், மார்க்கம் உண்டு என்பதற்கு ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை எடுத்துக்காட்டாக மாறியிருப்பதாகவே சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஜாதவின் இந்தப் பாராட்டுக்கு நெட்டிசன்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இனி H-1B விசா தேர்விற்கு புதிய Rule???'... 'திடீர் பரிந்துரையால்'... 'இந்தியர்களுக்கு எழுந்துள்ள அடுத்த பெரும் சிக்கல்!!!'...
- 'Emergency அனுமதி பெற்று'... 'ஜனவரியில் முதல் Batch தடுப்பூசி!'... 'பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!!'...
- 16 வயசுல இப்டியொரு ‘கண்டுபிடிப்பா’!.. வியந்துபோய் வேலையை ‘தூக்கி’ எறிந்த அப்பா..! இப்போ குடும்ப தொழிலே இதுதான்..!
- 'கொரோனா சிகிச்சையில்'... 'அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து!!!'... 'முழு அனுமதி வழங்கிய FDA!'...
- “இவர்களைத் தவிர” மற்ற வெளிநாட்டவர் இந்தியா வரத் தொடங்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
- 'திடீர் கட்டுப்பாடுகளால் H-1B விசா விவகாரத்தில்'... 'பெரும் சிக்கலில் இந்தியர்கள்!!!'... ' IT நிறுவனங்களுக்கு வைக்கப்பட்டுள்ள செக்!'...
- ‘இலவச சேவை’ வழங்கப்போகும் Netflix.. எப்போ தெரியுமா..? வெளியான ‘அசத்தல்’ அறிவிப்பு..!
- “இவ்வளோ வேலை பண்றீங்களா?”.. “என்ன சிம்ரன் இதெல்லாம்?”.. சிக்கிய பெண் உளவாளி.. அம்பலமான சீனா!
- எல்லாத்துக்கும் ‘காரணம்’ அவங்கதான்னு சொல்லிட்டு.. கடைசியில நீங்களே அங்க ‘அக்கவுண்ட்’ வச்சிருக்கீங்க.. வெளியான ‘பரபரப்பு’ தகவல்..!
- “இது என்னடா புது சோதனை? காஷ்மீர் சீனாவுல இருக்கா?”.. ட்விட்டருக்கு எதிராக வலுத்த கண்டனம்! .. அடுத்த சில மணிநேரங்களில் நடந்த ‘பரபரப்பு’ சம்பவம்!