’கேரளா’ கவர்ன்மெண்ட் வேற லெவல்ல பண்றாங்க ... நான் இங்க ரொம்ப பாதுகாப்பா இருக்கேன்... 'புகழ்ந்து' தள்ளும் "கால்பந்து பயிற்சியாளர்"!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தீவிரத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரசின் தீவிரத்தை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதிலும் குறிப்பாக கேரள அரசு மிக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் முதல் நோயாளி கேரள மாநிலத்தில் தான் அறிவிக்கப்பட்டது என்றாலும் அடுத்தடுத்து கேரள அரசின் நடவடிக்கைகளால் தற்போது புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்கேரிய நாட்டின் பயிற்சியாளர்களில் ஒருவரான டிமிட்டர் பாண்டேவ், கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கேரளா வந்த பல்கேரிய பயிற்சியாளர் டிமிட்டர் பாண்டேவ், பாலக்காடு பகுதியில் தங்கியிருந்த நிலையில் தற்போது கேரளாவின் நடவடிக்கை குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
'துபாயில் இருக்கும் எனது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில் கேரளாவில் தொழிற்பயிற்சி மையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அறிய வேண்டி கேரளா வந்தேன். எனக்கு கேரளாவில் வரவேற்பு அமோகமாக இருந்தது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் கேரள அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. சொந்த நாட்டில் இல்லாத ஏக்கம் எனக்கு வரவேயில்லை. அந்த அளவுக்கு கேரள அரசு மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. விரைவில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் ஆகியோரை விரைவில் சந்திக்கவுள்ளேன்' என பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'டாக்டர்கிட்ட கேட்டு எடுத்துக்கலாம்' ... 'கேரள அரசின் புதிய உத்தரவுக்கு நோ சொன்ன உயர்நீதிமன்றம்'!
- ‘இத்தாலியில் இருந்து வந்த மகன் குடும்பத்தால் பாதிப்பு’... ‘90 வயதில் கொரோனாவை வென்று’... ‘நாட்டுக்கே நம்பிக்கையூட்டிய முதிய தம்பதி’... ‘கைதட்டி ஆரவாரம் செய்த கேரளா மருத்துவர்கள்’... ‘ஆனாலும் செவிலியருக்கு நேர்ந்த சோகம்’!
- ஒரே நாளில் 28 பேருக்கு பாதிப்பு ... லாக் டவுன் ஆன கேரளா ... கட்டுப்பாடுகள் குறித்து பேசிய கேரள முதல்வர்!
- 'ஊடக மக்களே, பேட்டி எடுக்காதீங்க' ... 'மைக்' மூலமா கொரோனா பரவுதாம் ... கேரள அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு !
- பர்ஸ்ட் 'பூத்'ல போங்க ... அடுத்து உங்க வேலைய பாருங்க ... கொரோனாவைத் தடுக்க கேரள அரசின் 'பிரேக் தி செயின்'!