கங்கை நதி என்றாலே கோயில் மட்டுமில்ல... இனிமே 'இது'க்காகவும் தான்!.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி திட்டம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரதமர் அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதாரத் திட்ட அறிவிப்பின் மூன்றாவது நாளான இன்று , விவசாய நலனுக்கான திட்டங்களின் புதிய அம்சங்களில் ஒன்றாக கங்கை நதிக் கரைகளில் ரூ. 4,000 கோடியில் மூலிகை சாகுபடி திட்டத்தை நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

கங்கைக் கரையில் மூலிகைகளை சாகுபடி செய்வதற்காக தேசிய மருத்துவ தாவர வாரியம் (என்.எம்.பி.பி) கங்கை ஆற்றின் அருகே 800 ஹெக்டேர் நிலத்தை அடையாளம் காணும். மூலிகை சாகுபடியை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட ரூ .4,000 கோடி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது.

இத்திட்டம் விவசாய உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, தளவாடங்கள் மற்றும் விவசாய சந்தைப்படுத்தலுக்கான சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட முயற்சிகளின் முக்கிய பகுதியாக இது அமைகிறது.

என்.எம்.பி.பி 2.25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மருத்துவ தாவரங்களை பயிரிட்டுள்ளது. இப்போது, 10,00,000 ஹெக்டேர் நிலத்தில் மூலிகை சாகுபடிக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 4,000 கோடி செலவிடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்