சாலை ஓரத்தில் பூ விற்றவர் மகள்.. இப்போ கலிஃபோர்னியா University-ல.. நெகிழ்ச்சி சாதனை

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வாழ்நாளில் நிறைய சாதித்து தங்களின் லட்சியத்தை அடைய வேண்டும் என நினைப்பவர்களுக்கு கல்வி தான் முதல் படியாக இருக்கும்.

Advertising
>
Advertising

Also Read | மே 18-ல் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன்.. செய்தியாளர்களிடம் பேசிய முதல் வார்த்தை..

இதில் தேர்ந்து வரும் பலரும், அடுத்தடுத்து கல்லூரி படிப்பு, வேலை, குடும்பம் என அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்வார்கள்.

இப்படி கல்வியில் சாதிக்க வேண்டும் என துடிக்கும் அனைவருக்கும் அவ்வளவு எளிதில் அதற்கான வாய்ப்பு கிடைத்து விடாது.

தந்தையின் பூ வியாபாரம்

ஏராளமான கனவுகளை சுமந்து கொண்டு வாழ்ந்தாலும், குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட ஏராளாமான விஷயங்கள் ஒரு தடையாக இருக்கும். அப்படி அவற்றை எல்லாம் கடந்து சாதித்துக் காட்டியுள்ளார், மும்பையைச் சேர்ந்த இளம் பெண். மகாராஷ்டிர மாநிலம், மும்பை பகுதியைச் சேர்ந்தவர் சரிதா மாலி. இவரது தந்தை, சாலை ஓரத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

கலிஃபோர்னியாவில் பி.எச்டி..

பள்ளிக்காலத்தில் இருந்தே தந்தையுடன் சேர்ந்து பூ வியாபாரம் செய்வதில் ஈடுபட்டு வந்துள்ளார் சரிதா. மேலும், பூக்களை மாலையாக கட்டிக் கொடுத்து, அதனை வியாபாரமும் செய்து வந்துள்ளார். இதனையடுத்து, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், முதுகலை பட்டம் பெற்ற சரிதா, அதில் எம்.பில் மற்றும் ஆராய்ச்சி படிப்பும் படித்து முடித்துள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், சரிதாவுக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

குடும்பத்துக்காக பாடுபடணும்..

இதுகுறித்து பேசும் சரிதா மாலி, "அனைவருடைய வாழ்க்கையிலும் ஏற்றங்கள் மற்றும் இறக்கங்கள் உள்ளது. என்னுடைய வாழ்க்கையில் கஷ்டங்களை தான் நான் நிறைய சந்தித்து இருக்கிறேன். சிறு வயது முதல் தந்தையுடன் இணைந்து பூ வியாபாரம் செய்து வந்துள்ளேன். நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து விடுமுறைக்கு வரும் போது கூட, தந்தையின் வியாபாரத்தில் உதவி செய்து வந்தேன். அமெரிக்காவில் படித்து முடித்த பின், குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்" என தெரிவித்துள்ளார்.

சரிதா மாலியுடன் சேர்த்து, அவரின் தாய், தந்தை, சகோதரி மற்றும் இரண்டு சகோதரர்கள் என மொத்தம் ஆறு பேர் அவரது வீட்டில் உள்ளனர். தீபாவளி, தசரா என பண்டிகை காலங்களில் அதிகமாக பூ வியாபாரம் செய்து வந்த சரிதா, பெரும்பாலான நாட்களில் கண் திறப்பதே பூக்களை பார்த்து தான். கொரோனா தொற்றிற்கு பிறகு, அவரது தந்தையின் பூ வியாபாரம் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து, படித்து சாதித்து இன்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்த இளம்பெண்ணை பொது மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

FLOWER GARLAND SELLER, DAUGHTER, CALIFORNIA UNIVERSITY, ADMISSION IN CALIFORNIA UNIVERSITY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்