“வரதட்சணை கேட்டு துன்புறுத்துறாங்க!”.. ‘பிளிப்கார்ட் இணை நிறுவனர் மீது’ மனைவி பரபரப்பு புகார்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் சச்சின் பன்சால் என்பவர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி துன்புறுத்துவதாக அவருடைய மனைவி அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

“வரதட்சணை கேட்டு துன்புறுத்துறாங்க!”.. ‘பிளிப்கார்ட் இணை நிறுவனர் மீது’ மனைவி பரபரப்பு புகார்!

இது தொடர்பாக பெங்களூர் கோரமங்களா காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி திருமணத்தின்போது பிளிப்கார்ட் இணை இயக்குநர் சச்சின் பன்சாலுக்கு, தனது தந்தையார் 50 லட்சம் ரூபாய் வரதட்சணையாக அளித்ததாகவும், ஆனால் மேற்கொண்டு 11 லட்சம் ரூபாய் பின்னர் அளித்ததாகவும் சச்சின் பன்சாலின் மனைவி பிரியா தெரிவித்துள்ளார்.

தவிர தனது பெயரில் உள்ள சொத்துக்களையும் சச்சின் பன்சால் அவரது பெயருக்கு மாற்றித் தர சொல்லி தினமும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவருடைய குடும்பத்தாரும் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் பிரியா புகார் அளித்துள்ளார். 

இதன் அடிப்படையில் வரதட்சணை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் சச்சின் பன்சால் இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி விண்ணப்பத்துள்ளார்.  

CO-FOUNDER, FLIPKART, HUSBANDANDWIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்