'விஷவாயு கசிவில் குழந்தை உட்பட 5 பேர் மரணம்...' நச்சு வாயுவை சுவாசித்ததால் சாலையில் வாந்தி, மயக்கம்...' இந்தியாவை கலங்க செய்துள்ள அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

விசாகப்பட்டினத்தின் ஆர்.ஆர் வெங்கடபுரம் கிராமத்திலுள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரசாயன எரிவாயு ஆலையில் இருந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு பி.வி.சி வாயு (அல்லது ஸ்டைரீன்) என்னும் நச்சு வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமார் 200த்திற்கும் மேற்பட்ட மக்கள் சாலையில் மயங்கி விழுந்துள்ளார். நச்சுவாயு கசிவு தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

அலையை சுற்றி உள்ள 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு விஷவாயு பாதிப்பு ஏற்பட்டதுள்ளது. எனவே விஷவாயுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த அலையை சுற்றி இருக்கும் சுமார் 5 கிராம மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில்  இயங்கும் மின்சாதனங்களை துண்டிக்குமாறு பொதுமக்களுக்கு விசாகப்பட்டின மாநகராட்சி தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளது

ரசாயன ஆலையில் வெளிவந்த வாயுவை சுவாசித்த மக்களுக்கு வாந்தி, தலைவலி மற்றும் அதிகப்படியான மூச்சுத் திணறல் ஏற்பட்டு சாலையில் விழுந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். மொத்தம் 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலையில் இருந்து வெளிவந்த காற்றை சுவாசித்ததால் இதுவரை குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்