நீங்க எல்லாரும் இதை புலின்னு நெனப்பீங்க.. ஆனா அதுதான் இல்ல.. சிசிடிவி-ல் சிக்கிய ‘அரிய’ விலங்கு.. வனத்துறை வெளியிட்ட ‘வைரல்’ போட்டோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புலி போன்ற உருவம் கொண்ட அரிய விலங்கின் போட்டோவை வனத்துறை வெளியிட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பன்னா புலிகள் காப்பகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் அரிய விலங்கு தென்பட்டுள்ளது. முதலில் புலி என எண்ணிய அதிகாரிகள், பின்னர் அதை நன்றாக ஆய்வு செய்துள்ளனர். அப்போதுதான் அது ‘மீன்பிடி பூனை’ என்பது தெரியவந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின், மாநில விலங்கான மீன்பிடி பூனை மத்திய பிரதேசத்தில் தென்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் பன்னா வனப்பகுதியில் அவை வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக புலிகள் வாழும் பகுதியில் மீன்பிடி பூனைகள் இருக்காது என சொல்லப்படுகிறது. ஆனால் பன்னா புலிகள் காப்பக்கத்தில் இவை தென்பட்டது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மத்தியப் பிரதேச வனத்துறை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மீன்பிடி பூனையின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்