தேர்தல் 2019: முதல் ஓட்டுப் போட்டது யார்? எந்த மாநிலத்தில் பதிவானது தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த டி.ஐ.ஜி. சுதாகர் நடராஜன், 2019 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கை, முதலாவதாக பதிவு செய்து அசத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நாடுமுழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி, மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மே 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் வரும் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இன்னும் 5 தினங்கள் இருக்கும் நிலையில், அங்குள்ள இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி பள்ளியில் தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது. லோகித்பூரில் இருக்கும் விலங்குகள் பயிற்சி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் படை வீரர்கள், தங்களது தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி. சுதாகர் நடராஜன், தனது முதல் வாக்கைப் பதிவு செய்தார். இதன் மூலம் 2019 மக்களவைத் தேர்தலில் முதலில் ஓட்டுபோட்டவர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். தேர்தல் பணிகளில் ஈடுபடும் பாதுகாப்புப் படை வீரர்கள், அதிகாரிகள் ஆகியோர் தபால் மூலமாக தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அட இதை கண்டு அச்சப்படும் அரசியல் கட்சிகள்! ஏன் தெரியுமா?
- ஆணா, பெண்ணா ஐயோ பாவம் அவரே கன்ப்பியூஸ் ஆய்டாரு போல! பிரச்சாரத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு!
- 'இது வேற லெவல்’.. பார்க்கில் சந்தித்துக்கொண்ட எதிர்க்கட்சி வேப்டாளர்கள்.. வாக்கு சேகரித்த ருசிகரம்!
- 'நாந்தான் இந்தியன்.. நாந்தான் இந்து.. நீங்க ஆண்டி இந்தியன்’.. சாடும் கரு.பழனியப்பன்.. அனல் பறக்கும் பேட்டி!
- ‘கூட்ட நெரிசலில் படுகாயமடைந்த புகைப்படக் கலைஞர்’.. களத்தில் இறங்கிய ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ!
- ‘அவர் நோட்டா அடிச்சுட்டு இருக்காரு..நோட்டாவுக்கு ஓட்டு போட்டால், நாட்ட யார் காப்பாத்துறது?’.. கமலின் பிரத்யேக பேட்டி பகுதி 2
- துணை முதல்வரின் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்து.. பதறிய தொண்டர்கள்!
- பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா விஜயகாந்த்? என்ன சொல்கிறார்கள் டாக்டர்கள்?
- “5 ஆண்டுகள் என்ன கிழிச்சீங்க! இப்போ டூத் பேஸ்ட் விளம்பரம் போல வந்து பல்லைக் காட்றீங்க”; அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பெண்! வைரலாகும் வீடியோ!
- ‘ஒரே ஒரு வாக்குறுதிதான்.. மொத்த ஆம்பளைங்க வாக்குகளையும் அள்ளிடுவார் போல’.. அப்படி என்ன அது?