உலக அளவில் பாராட்டப்படும் 'வேற லெவல் முயற்சி'.. 'அசத்தும் திருமலை, திருப்பதி தேவஸ்தானம்!'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் சிறப்பு தரிசனம் மற்றும் சேவைகளுக்கு ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்தவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் தேவஸ்தான நிர்வாகம், பக்தர்கள் தங்கள் டிக்கெட்களை வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை ரத்து செய்து, பணத்தை திரும்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது சேவை தொடங்கிய பிறகு விரும்பும் நேரத்தில் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் ஏழுமலையான் தரிசனம் மீண்டும் தொடங்கப்பட, கட்டண தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக இலவச தரிசனத்திற்கு கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து டோக்கன்கள் வழங்கப்பட்டன. விஐபிக்கள் தரிசனமும் தொடங்கியது. சென்னையில் இருந்து சிறப்பு கூட ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன.

இதனிடையே, திருமலையில் அதிக வாகனங்கள் இயக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு உண்டாவதைத் தவிர்க்கும் வகையில் மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்து, பெங்களூருவில் உள்ள நிறுவனத்துடன் அதற்காக தேவஸ்தானம் ஒப்பந்தம் போட்டுள்ளது. தற்போது இது சோதனை ஓட்டத்தில் இருக்கும் இந்த வாகனங்களை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 160 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல், மொபைல் வடிவிலான எலக்ட்ரானிக் ரீடர் ஒன்றும் வழங்கப்படுகிறது.  புத்தகத்தின்பக்கத்தின் மீது இதனைக் கொண்டு ஃபிளாஸ் செய்தால், அந்த தகவலை ஆடியோ வடிவில் பெறலாம். இந்த ரீடரில் மொழி மாற்றம் செய்யும் வசதி கொண்டு, முதல் முயற்சியாக பகவத் கீதை, ஹனுமன் சலிசா ஆகிய புத்தகங்களை பேசும் புத்தகங்களாக மாற்றியுள்ளனர்.

பகவத் கீதையானது ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் இதில் கேட்க முடியும்.  அத்துடன் ஹனுமன் சலிசா புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஆன்மீகக் கருத்துகளை தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், அசாம், நேபாளி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் கேட்க முடியும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்