'நீங்கதான் நிஜ ஹீரோ!'.. 'தயங்கிய வீரர்கள்'.. 'நெருப்புக்குள் புகுந்து 11 பேரை மீட்ட தனி ஒருவன்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாவடக்கு டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் உள்ளது ஆனஜ் மண்டி. இங்குள்ள பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில், அதிகாலை நேரம் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக தீ பரவியது.
இந்த தீ விபத்தில் சிக்கி 43 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே கலங்கவைத்தது. இதனிடையே தீ விபத்தில் சிக்கிக் கதறிக்கொண்டிருந்த 11 தொழிலாளர்களை ஒரு தனி ஆளாய் நுழைந்து காப்பாற்றியுள்ள தீயணைப்பு வீரர் பலதரப்பில் இருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
அதிகாலை 5.22 மணிக்கு இந்த தீவிபத்து உண்டான நிலையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனாலும் வீரர்கள் யோசித்தபடி நின்றுகொண்டிருந்துள்ளனர். அதே சமயம், கொஞ்சமும் தயக்கமின்றி, தீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லா, புகைமூட்டத்துக்குள் சிக்கி மயங்கிக் கிடந்த 11 பேரை ஒருவர் ஒருவராக போய் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்.
இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தால் இவர்களும் தீக்கிரையாகியிருப்பார்கள். இதில் ராஜேஷ் சுக்லாவுக்கு ஆங்காங்கே தீக்காயம் உண்டான நிலையில், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவங்கு வந்து அவரை சந்தித்த மத்திய அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அவரை, ‘நீங்கதான் சுக்லா நிஜ ஹீரோ’ என்று பாராட்டினார்.
மற்ற செய்திகள்
டிசம்பருக்கு பின் ‘செல்லாது’.. ‘கொலையில்’ முடிந்த ‘வதந்தி’.. ‘கோவையில்’ நடந்த அதிரவைக்கும் சம்பவம்..
தொடர்புடைய செய்திகள்
- ஏன்?.. ‘என் சொந்த நாட்டுலயே என்னால பாதுகாப்பை உணரமுடியல’! தனி ஒருத்தியாக போராடி அதிர வைத்த இளம்பெண்..!
- 'எங்க சண்ட ரொம்ப உக்ரமா இருக்கும்'...'மாணவிகளுக்குள் நடந்த சண்டை'... வைரலாகும் வீடியோ!
- ‘டைட்டான ஜீன்ஸ் பேண்ட்’!.. ‘8 மணிநேர ட்ராவல்’.. இளம் தொழிலதிபருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘லட்சக்கணக்கில் கொள்ளை அடித்துவிட்டு’.. ‘சிசிடிவி ரெக்கார்டர் என நினைத்து’.. ‘கொள்ளையர்கள் செய்த காமெடி’..
- 'ப்ளீஸ் சொல்றத கேளுங்க.. வேண்டாம்'.. வழக்கறிஞர்களிடம் கெஞ்சி.. தடுக்க முயலும் பெண் காவல்துறை துணை ஆணையர்!
- ‘அம்மாவை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகள்’! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
- ‘டெல்லி பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்’... ‘முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி’!
- ‘இதையெல்லாம் நம்பர் பிளேட்டில் எழுதக்கூடாது’.. ‘250க்கும் அதிகமானவர்களுக்கு அபராதம் விதித்த போலீஸார்’..
- ‘தனியாக நடந்த சென்ற பெண்ணிடம் வழிப்பறி செய்த மர்மநபர்கள்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..!