'36 தீயணைப்பு வண்டிகள்.. தீப்பிடித்து எரியும் மருத்துவமனை வளாகம்'.. சிகிச்சையில் அருண் ஜேட்லி.. நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, டெல்லி பெரும் பரபரப்புடனும் பதற்றத்துடன் காணப்படுகிறது.

இந்தியாவின் முக்கியமான மருத்துவமனையான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 2வது தளத்தில் உள்ள சோதனைக் கூட பகுதியில் உண்டான திடீர் மின் கசிவு உடனடியாக தீவிர கண்காணிப்புப் பிரிவு உள்ளிட்ட அடுத்தடுத்த பகுதிகளுக்கு பரவத் தொடங்கியதால், பாதுகாப்பு அலுவலர்கள் முதல், நோயாளிகள், மருத்துவர்கள் என அனைவரும் பதறியுள்ளனர். எனினும் தீப்பிடித்த கட்டிடத்தில் நோயாளிகள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதோடு, பல முக்கிய தலைவர்கள் அவரின் உடல் நிலை பற்றிய தகவல்களை கேட்டறிந்து வருகின்றனர். தற்போது தீவிபத்துக்குள்ளாகியுள்ள அதே டெல்லி  எய்ம்ஸ் மருத்துவமனையில்தான் அருண் ஜேட்லி அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் கார்டியோ நியோரோ மையத்தின் ஐசியு பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் என்பதால், அந்த கட்டிடம் தீப்பற்றிய கட்டடத்துக்கு அருகில் இல்லை.

நிலைமையை சமாளிக்க, அதாவது தீயை அணைப்பதற்காக இதுவரையில் 36 தீயணைப்பு வண்டிகளுடன் கூடிய தீயணைப்பு வீரர்கள் அனுப்பப் பட்டு, அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆக, மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

FIREACCIDENT, AIIMS, HOSPITAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்