"நள்ளிரவில் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டுவேன்..." 'குற்றவாளிகளின்' வழக்கறிஞர் 'சவால்'... 'கடைசிநேர' வாதமும், போராட்டமும் 'தோல்வி'... நள்ளிரவு '2.30 மணிக்கு' 'மனு தள்ளுபடி'...
முகப்பு > செய்திகள் > இந்தியாநிர்பயா குற்றவாளிகளை விடுதலை செய்யக்கோரி நள்ளிரிவு பவன் குப்தா சார்பில் அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இரவு 2.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தங்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கவும், தண்டனையை தாமதப்படுத்தவும் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்னர்.
நிர்பயா வழக்கில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இறுதிவாய்ப்பாக முறையீடு செய்தனர்.
குற்றவாளிகளில் முகேஷ் சிங், பவன் குப்தா, அக்சய் சிங், வினய் சர்மா ஆகியோர் தாக்கல் செய்த 2-வது கருணை மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு நேற்று அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. தூக்கு தண்டனயை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தர்மேந்திர ராணா தள்ளுபடி செய்தார்.
இதனால், வெள்ளிக்கிழமை காலை திஹார் சிறையில் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் மீண்டும் கடைசி வாய்ப்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை குற்றவாளிகள் 4 பேரும் மேல்முறையீடு செய்தார்கள்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் தலையிலான அமர்வு முன் இரவு 10 மணிக்கு இந்த மனு விசாரிக்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஆஜரானார். அப்போது நீதிபதி மன்மோகன் சிங் “ இந்த மனுவைத் தாக்கல் செய்ய அனுமதி பெற்றீர்களா” எனக் nகள்வி எழுப்பினார்.
அதற்கு வழக்கறிஞர் ஏ.பி.சிங், “ கரோனா வைரஸ் காரணமாக என்னால் நகல்ஏதும் எடுக்கமுடியவில்லை” எனத் தெரிவித்தார்
அதற்கு நீதிபதி மன்மோகன்சிங் “ இன்று ஒரேநாளில் 3 நீதிமன்றங்களில் வாதாடிவிட்டீர்கள். தண்டனையை நிறுத்துவது சாத்தியமா?, உங்களால் வாதிட முடியாது. நீங்கள் முறையிட்டதால் இரவு 10 மணிக்கு விசாரிக்கிறோம். இந்த வழக்கில் மனுதாரர்கள் கோரிக்கையை விசாரிக்க எந்தவிதமான ஆவணங்களும் இல்லை, பிரமாணப்பத்திரம் இல்லை, இணைப்பு ஏதும் இல்லை .இதை நிராகரிக்கிறோம். அதுமட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உங்கள் வாதங்களை ஏற்க மறுத்துவிட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்தை மீறி எங்களால் தீர்ப்பு எவ்வாறு வழங்க முடியும், அதனால் தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
இதனிடையே நள்ளிரவு உச்சநீதிமன்றத்தில் முறையிடுவேன் என வழக்கறிஞர் ஏ.பி. சிங் செய்தியாளர்களிடம் கூறிவிட்டு சென்றார்.
பவன் குப்தா சார்பில் நள்ளிரவு குற்றவாளிகள் தண்டனை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி மனு மீதான விசாரணை இரவு 2.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இதன் மூலம் நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் காலை 5.30 மணிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி செய்யப்பட்டு, அதிகாலையில் நிறைவேற்றப்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'செருப்பை கழற்றி தன்னையே அடித்துக்கொண்டு...' நிர்பயா வழக்கு தூக்கு தண்டனை கைதியின் மனைவி கோர்ட் வாசலில் செய்த காரியம்...!
- 'என் கணவர் ஒரு அப்பாவி...' 'என்னால விதவையா வாழ முடியாது, அதனால...' நிர்பயா குற்றவாளியின் மனைவி நீதிமன்றத்தில் புதிய மனு...!
- "ஆத்தா... எனக்கு லீவு விட்டாச்சு..." "ஜெய் கொரோனா..." இந்த பீதியிலும் 'திருவண்ணாமலை ஜோதியை' பார்த்த மாதிரி.... அதிரவிட்ட 'ஐஐடி' மாணவர்கள்... என்னதான் 'லீவு' விட்டாலும் 'இப்படியா?'...
- 'இறந்த' உடலை தொடுவதாலோ, எரியூட்டுவதாலோ... 'கொரோனா' பரவுமா?... 'எய்ம்ஸ்' மருத்துவரின் புதிய 'விளக்கம்'...
- 'போலோ...' 'ஜெய் கோமாதா கி...' 'ஜெய் கோமாதா கி...' களைகட்டிய 'மாட்டு கோமியம்' பார்ட்டி... சியர்ஸ்... 'மஜா ஆகயா...' 'மஜா ஆகயா...'
- ‘டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடக்காது’... ‘டெல்லி துணை முதல்வர் அறிவிப்பு’... விபரங்கள் உள்ளே!
- இந்தியாவில் தீவிரமடையும் 'கொரோனா' ... 'பள்ளிகள்' முதல் 'திரையரங்குகள்' வரை ... டெல்லி முதல்வரின் புதிய அறிவிப்பு
- ‘ரொம்ப நேரமா பூட்டியிருந்த கதவு’.. ‘உடைச்சு உள்ளே போன போலீஸ்’.. முன்னாள் காதலிக்கு நடந்த பயங்கரம்..!
- #வீடியோ : '5,000' ரூபாய் மருந்து '1,500' ரூபாய்க்கு கிடைத்தது... இன்று 'உயிரோடு' இருக்கிறேன் என்றால் நீங்கள் தான் 'காரணம்'... 'தழுதழுத்த' பெண்... 'கலங்கிய பிரதமர்'...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!