"அம்மா சொன்ன அந்த விஷயம் தான்.." போனில் வந்த அழைப்பு.. ஆறே மாசத்தில் கோடீஸ்வரரான 'கான்ஸ்டபிள்'..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீ கங்கா நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் குல்தீப் சிங். இவர் பஞ்சாப் மாநிலம், ஃபெரோஸ்பூர் பகுதியில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | "பூமி'ய இப்டி பாத்துருக்கவே மாட்டீங்க.." பிரம்மிப்பில் ஆழ்த்தும் புதிய பரிமாணம்.. 'European' விண்வெளி நிலையம் வெளியிட்ட புகைப்படம்..

அப்படி ஒரு சூழ்நிலையில், லாட்டரி டிக்கெட் வாங்குவதை குல்தீப் சிங்க் ஒரு பழக்கமாக கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் அவர் பணியில் இருந்த போது, குல்தீப்பிற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய லாட்டரி கடை விற்பனையாளர், குல்தீப் வாங்கிய லாட்டரிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசும் குல்தீப் சிங், "லாட்டரி கடையின் விற்பனையாளரிடம் இருந்து, எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் நான் நாகலாந்து மாநில லாட்டரியில் முதல் பரிசு வென்றதாகவும் அவர் என்னிடம் கூறினார். தொடர்ந்து, லூதியானா வந்து பரிசுத் தொகை பெறுவதற்கான சம்பிரதாயம் அனைத்தையும் முடித்து விட்டு சென்றேன்.

எனது தாயார் தான், ஆறு மாதங்களுக்கு முன்பு லாட்டரி சீட்டு வாங்கும்படி என்னிடம் கூறினார். அதிலிருந்து தொடர்ந்து அதிர்ஷ்டத்தை நம்பி வாங்கி வரும் நான், லூதியானா வரும் போதெல்லாம் நாகலாந்து மாநில லாட்டரி டிக்கெட்டை வாங்கி வந்தேன். ஒரு பெரிய தொகையை நான் வெல்வேன் என்ற நம்பிக்கை இருந்தது ஆனால், ஒரு கோடி ரூபாய் பரிசை நான் வெல்வேன் என்று நினைக்கவே இல்லை. நான்கு மாதங்களுக்கு முன்பு, 6000 ரூபாயின் லாட்டரியில் பரிசு அடித்திருந்தது. அப்போதும் நான் மிக உற்சாகமாக இருந்தேன்.

தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு 150 ரூபாய்க்கு 25 லாட்டரி டிக்கெட்டுகளை நான் வாங்கி வந்தேன். அதே தினம் மாலை கடையின் கடை விற்பனையாளர் என்னிடம் ஒரு சிறந்த தகவலை சொன்னார்" என கடும் மகிழ்ச்சியில் குல்தீப் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல, இவ்வளவு பெரிய தொகை என்பது தனது சாதாரண வாழ்க்கையை ஒருபோதும் மாற்றப் போவதில்லை என்றும், தொடர்ந்து தான் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டே இருக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது பரிசு வென்றுள்ள தொகையை தனது எட்டு வயது மகனின் படிப்பு செலவுக்காகவும், அது போக பின்தங்கிய குழந்தைகளின் படிப்பு செலவுக்காகவும் வழங்குவதாக குல்தீப் உறுதி அளித்துள்ளார்.

இனிவரும் காலங்களில், தான் லாட்டரி வாங்கி அதில் பரிசு வென்றால் கூட அதனை பின்தங்கிய குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கும், சமூக பணிகளுக்கும் தான் செலவழிப்பேன் என்றும் குல்தீப் சிங் தெரிவித்துள்ளது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Also Read | முதல்'ல பேஸ்புக், அப்புறமா வாட்ஸ்அப்'ல.. வீடியோ காலில் வந்த பெண்??.. மறுநாளே தலையில் விழுந்த துண்டு

FEROZEPUR, POLICE CONSTABLE, LOTTERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்