கடவுளே, இது 'பொய்'யா இருக்க கூடாதா...? புனித் 'மரண' செய்தியை வாசிக்க முடியாமல்... - 'லைவ்'ல கண்ணீர் விட்டு கதறி 'அழுத' நியூஸ் ரீடர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இறந்த சம்பவம் கன்னட சினிமா துறை மட்டுமல்லாது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடவுளே, இது 'பொய்'யா இருக்க கூடாதா...? புனித் 'மரண' செய்தியை வாசிக்க முடியாமல்... - 'லைவ்'ல கண்ணீர் விட்டு கதறி 'அழுத' நியூஸ் ரீடர்...!
Advertising
>
Advertising

கன்னட திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார். 46 வயதான புனித் தன்னுடைய உடல் ஆரோக்கியத்திலும், உணவு பழக்க வழக்கங்களிலும் அதிக கவனம் செலுத்தும் வழக்கம் கொண்டவர்.

Female newsreader cries live on reading Puneeth death

இந்நிலையில், இன்று காலை (29-10-2021) புனித் ஜிம்மில் உடல் பயிற்சியில் ஈடுபட்ட போது நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண நெஞ்சு வலி தானே எப்படியும் உடல் நலம் தேறி வீடு திரும்புவார் என கன்னட திரையுலகமே நினைத்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

Female newsreader cries live on reading Puneeth death

இதனை கேட்ட கன்னட திரையிலகம் மட்டுமல்லாது அனைத்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்  அதோடு, பெங்களூரில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதோடு, நடிகர் புனித் இறந்த சம்பவங்கள் செய்தி சேனல்களில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. இந்நிலையில் புனீத் ராஜ்குமாரின் தீவிர ரசிகையாக செய்தி வாசிப்பாளர் ஒருவர், அவர் இறந்த செய்தியை படித்து முடித்தவுடன், நேரலையில் கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

புனித் அவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் மருத்துவமனையை சூழ்ந்தது. அதோடு புனித் அவர்கள் தன்னுடைய கண்ணை தானம் செய்த செய்தியும், அவரின் கண்கள் வேறொருவரின் வாழ்க்கையில் ஒளியூட்ட போவதான செய்தியும் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்