'என்ன நடக்க போகுது தெரியுமா'?... 'தாலிபான்கள் என்ன தேடி வர போறாங்க'... ஆப்கான் பெண் மேயர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதாலிபான்களின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் முழுமையாக தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகைக்குள்ளும் புகுந்தனர். இதைத்தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டுத் தப்பி ஓடினார்.
இந்த சூழ்நிலையில் தாலிபான்களின் ஆட்சியில் பெண்களின் நிலை என்ன ஆகப் போகிறது என்பது உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் கூறிய கருத்துகள் உள்ளது.
இதுகுறித்து பேசிய Zarifa Ghafari, ''தாலிபான்கள் நிச்சயமாக என்னைத் தேடி வருவார்கள், என்னைக் கொல்வார்கள். தற்போதைய சூழலில் தம்மையோ அல்லது தமது குடும்பத்தையோ தாலிபான்களிடம் இருந்து காப்பாற்ற யாராலும் முடியாது'' என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
27 வயதான Zarifa Ghafari ஆப்கானிஸ்தானின் Wardak மாகாணத்தின் முதல் பெண் மற்றும் மிக இளவயது மேயராக பணியாற்றி வருகிறார். தாலிபான்களின் ஆட்சி என்பது கொடூரமானது என்பதை உணர்ந்து பயப்படும் ஆப்கான் பெண்களின் குரலாகவே இவரது கருத்துகள் பார்க்கப்படுகிறது.
உயர்கல்வி பெற்ற பெண்கள் தங்கள் சான்றிதழ்களை மறைத்து வைக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் எனக் கூறும் Zarifa, இளம் சமூகத்தினர் கடந்த 20 ஆண்டுகளில் மிகவும் தெளிவு பெற்றுள்ளனர். அவர்கள் சமூக ஊடகங்களில் உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் தெரிந்து கொள்கின்றனர். எனவே அவர்கள் இனி நாட்டின் வளர்ச்சிக்காகவும் பெண்களின் உரிமைக்காகவும் போராடுவார்கள் என நம்புவதாக Zarifa தெரிவித்துள்ளார்.
2018 முதல் மேயராக பணியாற்றி வரும் Zarifa Ghafari, தனது வீடு, சொந்த மண்ணை விட்டு எங்கும் செல்ல முடியாது. அதே நேரத்தில் நாங்கள் இப்போது உதவியற்று நிற்கிறோம் என Zarifaவின் வார்த்தையில் இருக்கும் வலி என்பது அவருடையது மட்டுமல்ல, ஆப்கான் பெண்களின் மனதில் இருக்கும் வலியாகவே பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்