"இதுக்கு மேல தாக்குப்பிடிக்க முடியாது..." "உடனே கடைய திறங்க...!" 'கதறுவது குடிமகன்கள் அல்ல...'
முகப்பு > செய்திகள் > இந்தியாமாநில கஜானாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக மதுக்கடைகளை திறக்க மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென இந்திய மது உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடபட்டுள்ளன. இதனால் மாநில அரசுகள் சுமார் 20,000 கோடி வருவாயை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
வருவாய் இழப்பு தீவிரமடைந்துள்ளதால், கொரோனா ஹாட்ஸ்பாட் அல்லாத பகுதிகளில் மட்டுமாவது மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டுமென இந்திய மது உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் இந்திய மது உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில் “அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மது என்பது மாநிலங்களின் விவகாரம். ஆகையால், மது விற்பனைக்கு அனுமதியளிப்பதும், தடை விதிப்பதும் மாநில அரசுகளின் அதிகாரத்தில் இருக்க வேண்டும்.
ஆகையால், கோவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளுக்கு ஏற்ப கொரோனா ஹாட்ஸ்பாட் அல்லாத பகுதிகளில் மட்டுமாவது மது உற்பத்தி, விநியோகம், விற்பனைக்கு அனுமதிப்பது குறித்து மாநில அரசுகள் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் தொழில்துறைகளும், பொருளாதார செயல்பாடுகளும் முடங்கியுள்ளதால் மாநில கஜானாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அது சுட்டிக்காட்டியுள்ளது.
மது உற்பத்தி தொழில்துறை செயல்படாமல் முடங்கினால், நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், முற்றிலுமாக வருவாய் இல்லாத நெருக்கடியான சூழலில் நீண்டகாலத்திற்கு எங்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் மது உற்பத்தில் நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனாவுடன்’... ‘இந்த மாதிரி விஷயங்களையும்’... ‘எதிர்த்து போராட வேண்டியுள்ளது’... ‘மிரட்டலால் வருந்த வைத்த சம்பவம்’!
- சுட்டு 'வீழ்த்த' உத்தரவிட்ட டிரம்ப்... 'வெற்றிகரமாக' விண்ணில் பாய்ந்த செயற்கைக்கோள்!
- ‘ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி’.... ‘கொடுத்த பிரபல நிறுவனம்’... 'முன்னாடி மாறி செய்யப் போறது இல்ல’... என்ன காரணம் !
- "உங்களுக்கும் கொரோனா வேணுமா ப்ரோ?".. "அய்யய்யோ.. ஆள விட்றா சாமி!".. ஜன்னல் வழியே எகிறிய இளைஞர்!.. போலீஸார் நடத்திய தரமான சம்பவம்!
- "ஒளிஞ்சிருக்குற லட்சணம் அப்படி!".. 'ட்ரோனை' பறக்கவிட்டு 'உள்ளூர்' ஆட்டக்காரர்களை 'தெறிக்க விட்ட' நம்மூர் 'போலீஸார்'.. வீடியோ!
- '50 ஆயிரம்' கோடி வர்த்தகம்...கொரோனாவிற்கு மத்தியிலும்... 'தமிழக' மாவட்டத்திற்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்?
- வட கொரியாவை அடுத்து 'ஆளப்போவது'... கிம்மின் 'காதல்' மனைவியா?... இல்லை சொந்த தங்கையா?
- 'போலீஸ் எனக் கூறி...' 'ஃபூலிஸ் ஆக்கிய லாக்டவுன் ராபர்ஸ்...' ''லிஃப்ட் கேட்டா உஷார் மக்களே...''
- ‘தொடர்ந்து நீடிக்கும் மர்மம்’... ‘வெளிவராத தகவல்களால் அச்சமடைந்த மக்கள்’... ‘பற்றாக்குறையால் தவிப்பதாக தகவல்’!
- ''இது கொரோனாவை சோதிக்கல...'' ''எங்க பொறுமையத்தான் சோதிக்குது...'' 'சீனாவிடம்' பணத்தை 'திரும்பக் கேட்ட பிரிட்டன்...'