எனக்கு ‘கொரோனா’ இருக்கு... யாரும் ‘கிட்ட’ வாராதீங்க... ‘கற்களால்’ தாக்கியவர்... ‘அடுத்து’ செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திராவில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகத் தவறாகப் புரிந்துகொண்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த தொட்டம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணையா (54). இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சனிக்கிழமையன்று மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிறுநீரகத்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், தூசு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அவரை முகமூடி அணிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் பாலகிருஷ்ணையா தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால்தான் மருத்துவர்கள் முகமூடி அணியச் சொல்வதாக தவறாக நினைத்துக்கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக குடும்பத்தினரிடம் கூறிய அவர், தன் அருகில் யாரும் வரவேண்டாமெனக் கூறியுள்ளார். அதைமீறி அருகில் வந்தவர்கள்மீது கற்களை வீசித் தாக்கிய அவர் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டுள்ளார். அதன்பிறகு தன்னால் தனது கிராமத்தில் கொரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என நினைத்த பாலகிருஷ்ணையா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

SUICIDEATTEMPT, CRIME, CORONA, CHINA, ANDHRA, SUICIDE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்