‘அப்படி பெரிசா எதையும் மாத்தல’... ‘சாதகமாக்கிக் கொள்ள நினைத்த சீனாவுக்கு’... ‘இந்தியாவின் தரமான பதில்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவால் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில், அன்னிய நேரடி முதலீட்டு மூலம் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்த சீனாவிற்கு, இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்தியா உள்பட பல நாடுகள் பொருளாதாரத்தில் சீர்குலைந்துள்ளன. கொரோனாவில் இருந்து மீண்டுள்ள சீனா, இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பல நாடுகளில் முதலீடுகளை அதிகரித்து வருகிறது. அண்மையில் இந்தியாவிலும் தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சியின் பங்குகளை, சீனா மத்திய மக்கள் வங்கி வாங்கியிருந்தது.
இதையடுத்து, மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அதிரடியாக அன்னிய நேரடி முதலீடு விதிமுறையில் திருத்தங்கள் கொண்டு வந்தது. அதன்படி இந்தியாவை ஒட்டி இருக்கும் நாடுகள் அன்னிய நேரடி முதலீடுகளில், இனி மத்திய அரசின் ஒப்புதலை பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து குற்றம் சாட்டியது.
இந்நிலையில் உலக வர்த்தக அமைப்பு விதிகள் எதையும் மீறவில்லை என்று மத்திய அரசு சீனாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அண்டை நாடுகளின் முதலீட்டை மறுக்கவில்லை என்றும், அதற்கான அனுமதியை அளிப்பதில் சிறிய நடைமுறை மாற்றம் மட்டுமே செய்துள்ளதாகவும், இந்தியாவின் வர்த்தக அமைச்சகம் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இதுவரை 'பார்த்ததெல்லாம்' அல்ல... 'இனிதான்' கொரோனாவின் 'கோரமான' பாதிப்புகள் இருக்கும்... என்ன 'காரணம்?'... 'அதிர்ச்சி' கொடுக்கும் 'எச்சரிக்கை'...
- 'ஏசி' காற்று வழியாக ஹோட்டலில் பரவிய கொரோனா...! எப்படி அந்த '3' டேபிளுக்கு மட்டும் கொரோனா வந்துச்சு...? ஆச்சரியமளிக்கும் ஆய்வு முடிவுகள்...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'தெலுங்கானா' டூ சொந்த 'ஊர்'... நடந்தே வந்த '12 வயது' சிறுமி... வீட்டை நெருங்குகையில் நடந்த... 'துயர' சம்பவம்...!
- 'சீனாவில்' விசாரணை... 'வுஹானுக்குள்' நுழைய 'அனுமதி' இல்லை... 'முற்றும்' மோதலால் 'பரபரப்பு'...
- ஊரடங்கிற்கு பின் 'பாதிப்பு' அதிகரித்தாலும்... 'இது' குறைவே... மத்திய அரசு வெளியிட்டுள்ள 'ஆறுதல்' செய்தி...
- ‘எல்லோரையும் சமமா நடத்துங்க’... ‘வழிகாட்டுதல்களில் எல்லையை தாண்டுறீங்க’... ‘இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா’!
- 'இந்தியா' உட்பட 10 நாடுகளை விட 'இதை' அதிகமாக செய்துள்ளோம்... இல்லையென்றால் 'உயிரிழப்பு' பல மடங்கு 'உயர்ந்திருக்கும்'...
- சீனா '130 பில்லியன்' 'யூரோ' இழப்பீடு வழங்கவேண்டும்... 'நோட்டீஸ்' அனுப்பியது 'ஜெர்மனி...' 'சீனா அளித்த கூல் பதில்...'
- "வைரஸ் தானா பரவுச்சா?..." "இல்ல பரப்புனாங்களா?..." 'சீனாவுக்கு' நேரா போனாதான் 'தெரியும்...' 'அதிபர்' ட்ரம்பின் அதிரடி 'முடிவு...'