‘பர்த்டே கேக்கில் விஷம்’.. ‘சாப்பிட்ட அப்பா, மகன் பலி’.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சொத்து தகராறில் சொந்த அண்ணன் குடும்பத்தினரை பர்த்டே கேக்கில் விஷம் வைத்து கொலை செய்ய முயன்ற தம்பியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘பர்த்டே கேக்கில் விஷம்’.. ‘சாப்பிட்ட அப்பா, மகன் பலி’.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ராம்சரண். இவரது 9 -வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ரவி பர்த்டே கேக் வாங்கி வந்துள்ளார். இதனை அடுத்து மாலையில் குடும்பத்தினருடன் மகனின் பிறந்தநாளை ரவி கொண்டாடியுள்ளார். கேக் சாப்பிட்ட சிறிதி நேரத்தில் அனைவரும் மயங்கி விழுந்துள்ளனர்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் ரவி மற்றும் அவரது மகன் ராம்சரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் ரவியின் மனைவி மற்றும் அவரின் மற்றொரு பெண் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ரவிக்கும் அவரது சொந்த தம்பி சீனிவாஸுக்கும் இடையே சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் சீனிவாஸ் பர்த்டே கேக்கில் விஷம் கலந்தது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சீனிவாஸை தேடி வருகின்றனர். மேலும் ரவி கேக் வாங்கிய கடை குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் சொந்த அண்ணனின் குடும்பத்தை தம்பி கொலை செய்ய பர்த்டே கேக்கில் விஷம் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FATHER, DIED, SON, TELANGANA, BIRTHDAY, POISON, CAKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்