காதலியை பார்க்க ‘இரவு’ வீட்டுக்குள் நுழைந்த காதலன்.. திருடன் என நினைத்து ‘கதவை’ உடைத்த பெண்ணின் அப்பா.. அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காதலியை சந்திக்க வீட்டுக்கு வந்த இளைஞரை பெண்ணின் தந்தை திருடன் என கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலியை பார்க்க ‘இரவு’ வீட்டுக்குள் நுழைந்த காதலன்.. திருடன் என நினைத்து ‘கதவை’ உடைத்த பெண்ணின் அப்பா.. அதிர்ச்சி சம்பவம்..!
Advertising
>
Advertising

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் லாலன் சைமன். வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஆண்டு ஊருக்கு திரும்பி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

Father kills youth after finding him in his daughter room

இந்த நிலையில் நேற்று இரவு லாலன் சைமனின் மகள் அறையில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. உடனே திருடன் புகுந்து விட்டான் என்று கையில் கத்தியுடன் அங்கு சென்றுள்ளார். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது இளைஞர் ஒருவரை நிற்பதை பார்த்த லாலன் சைமன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Father kills youth after finding him in his daughter room

இதனை அடுத்து அந்த இளைஞர் வேகமாக பாத்ரூமுக்குள் ஓடித் தப்பிக்க முயன்றிருக்கிறார். இதனால் அந்த இளைஞரை லாலன் சைமன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார்.

இதனை அடுத்து வீட்டுக்குள் புகுந்த திருடனை கத்தியால் குத்திவிட்டதாக காவல் நிலையத்திற்கு லாலன் சைமன் தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில், லாலன் சைமன் கத்தியால் குத்திய இளைஞரின் பெயர் அனீஷ் ஜார்ஜ் (வயது 19) என்பது தெரியவந்துள்ளது. லாலன் சைமனின் வீட்டில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் அனீஷ் ஜார்ஜின் வீடு அமைந்துள்ளது. இவர் திருவனந்தபுரத்தில் ஒரு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதில் அனீஷ் ஜார்ஜும், லாலன் சைமனின் மகளும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தெரிவித்த போலீசார், ‘ லாலன் சைமனின் பிளஸ் 1 படிக்கும் மகளும், அனீஷ் ஜார்ஜும் பழகி வந்துள்ளனர். அனிஷின் குடும்பத்தை லாலன் சைமனுக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது. நேற்று அதிகாலை அனீஷ் லாலன் சைமனின் வீட்டுக்கு அவரது மகளை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அனீஷ் என தெரிந்த பின்னர்தான் லாலன் சைமைன் அவரை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. பின்னர் காவல்நிலையத்தில் திருடன் என கூறி நாடகமாடியுள்ளார். இது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம’ என போலீசார் தெரிவித்துள்ளனர். மகளை சந்திக்க வந்த இளைஞரை தந்தை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

KERALA, MURDER, YOUTH, FATHER, LOVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்