'பாப்பாவ' காணோம்... 'பதறியடித்து' போலீசுக்கு போன தந்தை... காத்திருந்த 'ஷாக்கிங்' ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது மூன்றாம் கட்டமாக ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கிட்டத்தட்ட நாடு முழுவதும் 38 நாட்களுக்கு மேல் ஊரடங்கு கடந்த நிலையில், வருமானம் இல்லாமல் தினசரி கூலி தொழிலாளர்கள் கடும் அவதிக்குளாகி வருகின்றனர்.

தற்போது மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இது அவர்களை இன்னும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள பழங்குடி கிராமம் ஒன்றை சேர்ந்த விவசாயி ஜீவா தன்னருகில் தூங்கிக் கொண்டிருந்த மகளைக் காணவில்லை என அலறியடித்துக் கொண்டு கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார், ஜீவாவின் மகளை தேடிய போது, அவரின் வீட்டின் அருகிலேயே நான்கு வயது சிறுமி கழுத்தறுபட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது. சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு வேண்டி அனுப்பிய பின்னர் சிறுமியின் தந்தை ஜீவாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடீரென உடைந்து அழுத ஜீவா, தன் மகளை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'எனக்கு நிறைய பணப்பிரச்சனை. அதிலிருந்து எப்படி மீள வேண்டும் என்று எனக்கு வழி தெரியவில்லை. எனக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். அவர்களுக்கு உணவளிக்கவும் வழியில்லை. அதில் ஒரு குழந்தையை கொலை செய்தால் மற்ற இரண்டு குழந்தைகளுக்கு உணவளித்தால் போதும் என்ற முடிவில் இதனை செய்து விட்டேன். என் மகளை என் கையால் கொன்றதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை' என கண்ணீர் மல்க ஜீவா தெரிவித்துள்ளார்.

வறுமையின் காரணமாக சொந்த மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்