'ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள்!'... 'சுங்கச்சாவடிகளில் அவலம்!'... 'போலீஸ் பாதுகாப்பு'...
முகப்பு > செய்திகள் > இந்தியாசுங்கச்சாவடிகளில் கட்டாய ஃபாஸ்டேக் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், வாகனங்கள் விரைவாக செல்லவும், நீண்ட நேரம் காத்திருந்து கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கவும், ஃபாஸ்டேக் என்ற எலக்ட்ரானிக் பணம் செலுத்தும் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், வாகன உரிமையாளர்கள் வங்கிகளில் முன்கூட்டியே கட்டணம் செலுத்தி, ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் பெற்று வாகனத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு, சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும் போது, அந்த வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து தானாக பணம் செலுத்துப்பட்டுவிடும். இந்நிலையில், இன்று முதல் ஃபாஸ்டேக் முறை கட்டாயமாகி உள்ளதால், ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள், உரிய லேனில் நிற்காமல் செல்ல முடிந்தது. ஃபாஸ்டேக் லேனைப் பயன்படுத்தும், ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
அதே வேலையில், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் செல்ல பிரத்யேக லேன்கள் உள்ளன. இதனால், கட்டண செலுத்தப் பயன்படும் லேன்களில், நெடுந்தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்துக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சில இடங்களில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டதால், பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நியூ இயர் பிறக்கும் நள்ளிரவில்... சென்னையில் மெட்ரோ ரயில்... எவ்வளவு நேரம் இயங்கும்?... எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றங்கள்?... பைக் ரேஸை தடுக்க மூடப்படும் 75 மேம்பாலங்கள்!
- 'அசுர வேகத்தில் வந்து ஓவர் டேக்'...'கட்டுப்படுத்த முடியாத வேகம்'...உறையவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- நாடு முழுவதும் 'பாஸ்டாக்' அமல்.. ஆனா 'சென்னைக்கு' மட்டும் கெடையாது.. ஏன்?.. என்ன காரணம்?
- 'என்னா டிராஃபிக்!'.. 'இனி பூ பாதை இல்ல; சிங்கப் பாதைதான்!'.. வாகன ஓட்டியின் 'வேறலெவல்' ஐடியா!
- 'டோல் கேட்'ல காத்திருக்க வேண்டாம்'...'டிச.1 முதல் 'ஃபாஸ்ட் டேக் சிஸ்டம்'... கட்டணம், ரீசார்ஜ் செய்யும் முறை!
- ‘இப்படியும் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்!’.. ‘இளம் பெண்ணின் வித்தியாச முயற்சி’.. ‘வைரலாகும் வீடியோ’..
- Video: நீ 'போடவே' வேணாம்.. பூசணிக்காய்களாக உடைந்து 'சிதறும்' ஹெல்மெட்கள்!
- 'நிக்க மாட்டீங்க?'.. 'காவலர் தூக்கி வீசிய லத்தி!'.. 'பைக் டயரில் சிக்கி'.. 'இளைஞர்களுக்கு' நடந்த 'விபரீதம்'!
- ‘இதையெல்லாம் நம்பர் பிளேட்டில் எழுதக்கூடாது’.. ‘250க்கும் அதிகமானவர்களுக்கு அபராதம் விதித்த போலீஸார்’..
- 'நம்பர் பிளேட்ல இப்படிலாமா எழுதி வெப்பாங்க?.. அது சரி நம்பர் எங்க?'.. 'டிராஃபிக் போலீஸிடம்' சிக்கிய நபர்!