உலக புகழ் பெற்ற ‘பாப்’ பாடகி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பதிவிட்ட ஒரே ஒரு ட்வீட்.. அடுத்த நிமிஷமே இந்தியர்கள் தேடிய ‘அந்த’ வார்த்தை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக புகழ் பெற்ற அமெரிக்க பாப் பாடகி ரிஹான்னா விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்கு பிறகு போராட்டம் நடந்துவரும் பகுதியில் இண்டெர்நெட் துண்டிக்கப்பட்டு மீண்டும் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உத்தர பிரதேசம்-டெல்லி காசிபூர் எல்லையில் விவசாயிகள் போராட்டத்தை கலைக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதனால் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து சாலையில் ஆணிகளை போலீசார் புதைத்து வைத்துள்ளனர். விவசாயிகள், டிராக்டர்கள் அந்த இடத்தை கடந்த வரமுடியாத அளவிற்கு போலீசார் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பிரபல பாப் பாடகி ரிஹான்னா விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ‘நாம் ஏன் இதைப்பற்றி பேசவில்லை?’ என்று கேள்வி எழுப்பியதுடன், போராட்டத்தை முடக்குவதற்கான முயற்சி என்ற செய்தியை டேக் செய்து அவர் பதிவிட்டுள்ளார். 101 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை கொண்டுள்ள ரிஹான்னாவின் இந்த பதிவு ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
ரிஹான்னாவின் இந்த பதிவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் பதிவிட்ட சில நிமிடங்களில், ‘ரிஹன்னா மதம் என்ன?’ என்று இந்தியர்கள் பலர் கூகுளில் தேடியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘விவசாயிகள் தொடர் போராட்டம்’.. சாலையில் ‘ஆணிகளை’ பதித்த டெல்லி போலீசார்..!
- ‘எங்களை அடிச்சது விவசாயிகள் இல்ல, அடியாட்கள்தான்’!.. காயமடைந்த டெல்லி போலீசார் ‘பரபரப்பு’ தகவல்..!
- ‘நாங்க அடி வாங்குறதுக்கு இங்க வரல’!.. டிராக்டர் பேரணியில் வெடித்த வன்முறை.. 2 விவசாய சங்கங்கள் எடுத்த ‘பரபரப்பு’ முடிவு..!
- VIDEO: ‘அவரை ஒன்னும் பண்ணாதீங்க’!.. போராட்ட களத்தில் ‘தனியாக’ சிக்கிய போலீஸ்.. தலைநகரை திரும்பி பார்க்க வச்ச மனிதம்..!
- ‘செங்கோட்டையில் பறந்த விவசாயிகள் கொடி’!.. தடையை மீறி டெல்லிக்குள் நுழைந்த டிராக்டர் பேரணி.. உச்சக்கட்ட பரபரப்பில் தலைநகர்..!
- எங்களுக்கு ‘மொய் பணம்’ வேண்டாம்.. மண்டபத்தில் ஒரு ‘பெட்டி’ வைத்த கல்யாண வீட்டார்.. குவியும் பாராட்டு..!
- ‘அய்யா உங்க சாப்பாடு வேண்டாம்’!.. உணவு இடைவேளையில் அதிகாரிகளை அதிரவைத்த விவசாயிகள்..!
- ‘நாங்க விவசாயிகளின் பிள்ளைங்க’!.. ‘இதுக்குமேல அத வச்சி என்ன பண்ண போறோம்’.. முன்னாள் விளையாட்டு வீரர்கள் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!
- 'யாரா இருந்தாலும் சரி...' - கனடா பிரதமரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த 'நடிகை' குஷ்பு!
- வைரல் ஆகும் ஃபோட்டோ.! ‘உண்மையில் இரண்டிலும் இருப்பவர் ஒரே பாட்டியா?’.. ‘பலவிதமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!’